வரும் ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு ஒன்பது மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது..! பிரதமர் மோடி உத்தரவு!

தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்ற உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. ஒரு சில நாடுகள் கொரோனாவால் எவ்வளவு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று நாம் பார்க்கிறோம். நமக்கு அந்த நிலைமை வராது என்று நாம் குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் இருக்க கூடாது.
கொரோனாவிற்கு எதிராக நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். ஜனதா ஊரடங்கு தான் இதற்கு சரியான திட்டம். ஜனதா ஊரடங்கு என்றால் மக்களால் மக்களுக்காக செய்யப்படும் ஊரடங்கு. இதன் படி வரும் ஞாயிற்றுக்கிழமை யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது.
காலை ஏழு மணி முதல் அன்று இரவு ஒன்பது மணி வரை பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். இப்படி இருப்பதன் மூலம் கொரோனா பரவுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு மோடி கூறினார்.