ஜாலியன் வாலாபாக் படுகொலையும், சுதந்திரப்போராட்ட எழுச்சியும்!

நம்முடைய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் இந்திய நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தர வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தனர்.


இதனை சுத்தமாக தகர்த்தெறிய வேண்டும் என்று இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மக்களை அழிக்க முயன்றனர். இதற்காக பலவித திட்டங்களை தீட்டினர். அதில் மிகவும் கொடூரமான ஒரு திட்டம் தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம். 

1918 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி ரௌலட் சட்டம் என்பதை கொண்டு வந்தது. இதன் மூலம் எந்த அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அவர்களை கைது  மற்றும் விசாரணை செய்யலாம் என்று  கூறியது. இச்சட்டம் ஆங்கிலேயருக்கு ஆதரவாகவும் இந்தியர்களுக்கு எதிராகவும் போடப்பட்டது .

1918 ஆம் ஆண்டு ஜெனரல் டயர் என்னும் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் மக்கள் எந்த இடத்திலும் கூட கூடாது என்று ஒரு சட்டத்தை போட்டார் . இதனை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார் .

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம்  13 ஆம் தேதி , ஜாலியன் வாலாபாக் எனுமிடத்தில் அறுவடை திருவிழா நடைபெறும். இதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாய் கூடுவது அவர்களது வழக்கம். 

ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இவ்வாறாக மக்கள் திரண்டு உள்ளதை அறிந்த ஜெனரல் டயர்  தன்னுடைய பேச்சை மீறி  இந்த திருவிழாவை நடத்திய மக்கள் மீது பெரும் கோபம் கொண்டு அவர்களை தண்டிக்க நினைத்தார்.

மிகப் பெரிய மதில் சுவர்களை கொண்ட அந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருந்த நிலையில் அந்த இடத்தை முற்றிலுமாக அடைத்து அந்த மக்களை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அங்கு வந்த ஜெனரல் டயர் தன்னுடைய அதிகாரிகளைப் பயன்படுத்தி அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் தங்களுடைய துப்பாக்கிகளில் இருந்து வெளிவரும் குண்டுகள் தீர்ந்து போகும் வரை அந்த துப்பாக்கிச் சூடு நடைபெற வேண்டும் என்று தன்னுடைய வீரர்களுக்குக் கட்டளையிட்டார் பிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல் டயர். 

இந்த துப்பாக்கி சூட்டில் ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் ஈவு இரக்கம் இன்றிக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் சுமார் 1700 பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.

இந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை அடுத்து போராட்ட வீரர்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது இதுவே வெள்ளையர்களிடமிருந்து  சுதந்திரம் பெறவேண்டும் எனும் உணர்வை பெரிதும் தூண்டியது என்றே கூறலாம்.