மோதிய வேகத்தில் ஜீப் மீது ஏறிய டாரஸ் லாரி..! சாமி கும்புட சென்ற புதுமணத் தம்பதி உள்ளிட்ட 11 பேர் துர் மரணம்! நெஞ்சை உலுக்கும் விபத்து!

ஜெய்ப்பூர்: ஜீப் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுமண தம்பதி உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.


ராஜஸ்தான் மாநிலத்தில்தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஜோத்பூர் மாவட்டம், ஷேர்கார் அருகே உள்ள பாலோத்ரா நெடுஞ்சாலையில், சென்றுகொண்டிருந்த லாரியும், ஒரு ஜீப்பும் நேருக்கு நேர் எதிர்பாராவிதமாக மோதிக்கொண்டன. இதில், லாரிக்கு அடியில் சிக்கி ஜீப் நசுங்கியது. அதில் பயணித்த 6 பெண்கள்  உள்பட 11 பேர் உயரிழந்தனர். இவர்களில், புதுமண தம்பதியும் அடக்கம்.

அவர்களுக்கு கடந்த பிப்ரவரி 27ம் தேதிதான் திருமணம் நிகழ்ந்தது.   தம்பதி சகிதமாக உறவினர்கள் அனைவரும் ராம்தியோரா கோவிலுக்குச் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த பரிதாப விபத்து நிகழ்ந்து, அனைவரின் உயிரையும்  பறித்துள்ளது. விபத்து பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.