வேலைக்காரர் புகார்! போலீஸ் விசாரணை! கதறி அழுத ரித்தீஷ் மனைவி!

ஜேகே ரித்தீஷ் மனைவி மீது அவரது வீட்டு வேலைக்காரர் என்று கூறப்படும் கிஷோர் கொடுத்த புகார் குறித்து உண்மை நிலை தெரிய வந்துள்ளது.


ஜேகே ரித்தீஷ் கூறியபடி அவரது தியாகராயநகர் வீட்டைத்தான் பராமரித்து வந்ததாகவும் இந்த வகையில் தனக்கு நான்கு லட்சம் ரூபாய் பாக்கி இருப்பதாகவும் அதனை திருப்பிக் கேட்டதற்கு தன்னை ஆபாசமாக பேசி மக்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக ரித்தீஷ் மனைவி ஜோதி மீது தியாகராய நகர் காவல் நிலையத்தில் கிஷோர் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக தியாகராய நகர் போலீசார் ஜோதியை அவரது வீட்டில் சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஜோதி கண்ணீர்விட்டு கதறினார். தன்னுடைய கணவர் இருந்தவரை கணக்கு வழக்குகள் அனைத்தையும் அவர் தான் கவனித்து வருவதாகவும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஜோதி தெரிவித்துள்ளார். ஆனால் கணக்கு வழக்குகளை கவனித்து வந்த ஆடிட்டர் ஒருவர் கூறிய தகவலின் படி எங்களுடைய சொத்துக்கள் யார் யாரிடம் இருக்கிறது என்று கணக்கெடுத்து அதனை திரும்பப் பெற்று வருவதாகவும் ஜோதி கூறியுள்ளார்.

அந்த வகையில் தியாகராய நகரில் ஒரு வீடு எனது கணவர் பெயரில் உள்ளது. அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது கிஷோர் என்பவர் இருந்துள்ளார். கேட்டதற்கு தான் ரித்தீஷ் தொடர்புடைய ரியல் எஸ்டேட் பண பரிவர்த்தனைகளை கவனித்து வந்ததாகவும் அந்த வகையில் இந்த வீட்டை இடத்தில் தனக்கு கொடுத்துவிட்டதாகவும் கிஷோர் என்னிடம் கூறினார்.

அப்படி என்றால் அதற்குரிய பத்திரத்தை காட்டுங்கள் என்றதும் என்னை கிஷோர் மிரட்டினார். இதனைத் தொடர்ந்து எனது கணவருக்கு கிஷோர் யார் மூலமாக பழக்கமானார் என்று விசாரித்து ஐசரி கணேஷ் அதன் மூலம் பழக்கமான என்று தெரிந்து கொண்டதாக ஜோதி தெரிவித்தார். இதனையடுத்து ஐசரி கணேஷ் என்னை சந்தித்து வீட்டிலிருந்து கிஷோரை காலி செய்து கொடுக்குமாறு பங்கேற்றதாகவும் அவரும் மனிதாபிமான அடிப்படையில் கிஷோரை தொடர்பு கொண்டு வீட்டை காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஜோதி தெரிவித்தார்.

ஆனால் உண்மை இப்படியிருக்க தான் அடியாட்களை வைத்து மிரட்டியதாகவும் ஆபாசமாக பேசியதாகவும் கிஷோர் பொய் புகார் அளித்துள்ளதாக கண்ணீர்விட்டு கதறினார் ரித்தீஷின் மனைவி ஜோதி. தன் கணவர் இருந்தவரை தங்களை தெய்வமாக போற்றியவர்கள் தற்போது ஏமாற்ற பார்ப்பதாகவும் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து கிஷோரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.