ஜேகே ரித்தீஷ் மனைவி மீது வேலைக்காரர் பகீர் புகார்! பாண்டி பஜார் ஸ்டேஷன் பரபரப்பு!

கடந்த மாதம் காலமான நடிகர் ஜேகே ரித்தீஷ் மனைவி மீது அவரது வீட்டு வேலைக்காரர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.


நடிகர் தயாரிப்பாளர் அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட ஜேகே ரித்தீஷ் கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார். இந்த நிலையில் அவரது வீட்டில் வேலைபார்த்து வந்த கேசவன் என் பவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சுமார் இருபது வருடங்களாக தான் ஜேகே ரித்தீஷ் உடன் இருந்து வருவதாக கேசவன் கூறியுள்ளார். தியாகராய நகரில் உள்ள ஒரு வீட்டில் தான் தங்கி இருப்பதாகவும் அந்த வீட்டை பராமரித்து கொண்டு அங்கேயே இருக்குமாறு இறுதியில் தன்னை கேட்டுக்கொண்டதாகவும் கேசவன் கோரியுள்ளார். அந்த வீட்டிற்கு பராமரிப்பு பணிகள் செய்த வகையில் தனக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை ரித்தீஷ் தர வேண்டியுள்ளது என்றும் கேசவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரித்தீஷ் காலமானதைத் தொடர்ந்து அந்த வீட்டில் இருந்து தன்னை வெளியேறுமாறு அவரது மனைவி ஜோதி கூறியதாகவும் ஆனால் தனக்கு வரவேண்டிய 4 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் காலி செய்து விடுவதாக அவருக்கு பதில் அளித்ததாகவும் கேசவன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஐசரி கணேசன் என்பவர் செல்போனில் தன்னைத் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும் வீட்டை ஜோதிடம் கொடுத்து விட்டு ஓடிவிட வேண்டும் என்று கூறியதாகவும் கேசவன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்ட ஒரு குருடன் நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்த ரித்தீஷ் மனைவி ஜோதி என்னை ஆபாசமாக பேசியதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கேசவன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஜோதி மற்றும் ஐசரி கணேஷ் தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் கேசவன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.