ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு ஏவல் மட்டும் செய்யும் தலைவன் அல்ல என்பதை மீண்டும் நிரூபித்த தமிழக காவல்துறை தலைவர் ஜே.கே.திரிபாதிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் என்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜே.கே.திரிபாதி உயிரிழந்த தலைமைக்காவலர் சுப்பிரமணியனின் இறுதிச் சடங்கில் அவரின் உடலை சுமந்து சென்றார்..! சூப்பர் சார்.!

ஆம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலையில் ரௌடியை பிடிக்கச்சென்ற போது நாட்டு வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்டு உயிரிழந்த தலைமைக்காவலர் சுப்பிரமணியனின் மரணத்தில் அந்தக்காவலரின் குடும்பத்தின் நலனில் அவர் காட்டிய அக்கரை...
முதல்வரின் ஐம்பது லட்ச ரூபாய் நிவாரண அறிவிப்பிற்கும் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசாங்க வேலை கொடுக்கப்படும் என்ற அறிவிப்பிற்கும் பேக் ஸீட் டிரைவராக இருந்தவர் காவல்துறை தலைவர் திரிபாதி என்று காவல்துறையினர் பெருமையோடு சொல்கிறார்கள்...
டிஐ ஜி திரு திரிபாதி செய்தியாளர்களிடம் பேசும்போது "காவல்துறையினரை யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியும். அவர்களுடைய வாழ்க்கை, உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும்.
காவல்துறையினரை ஊக்கப்படுத்துவதற்காக நான் இங்கு வரவில்லை. ஊக்கப்படுத்துவதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கிறது. இந்த காவல்துறை குடும்பத்துக்கு நான்தான் தலைவர். இந்த குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்ட நிலையில், காவலர்களுக்கு நான் உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்காகத் தான் நான் இங்கு வந்தேன்" என்றார்
அதோடு மட்டும் அவர் நின்றுவிடவில்லை. மரணமடைந்த காவலரின் இறுதிச் சடங்கிற்கு நேரடியாக வந்ததோடு நில்லாமல் அவரின் உடலை சக போலீஸ் அதிகாரிகளோடு சுமந்துசென்றது பார்வையாளர்கள் மத்தியில் பொதுமக்கள் மத்தியில் காவல் துறை மீது மதிப்பைக் கூட்டியுள்ளது.
சூப்பர் சார்.