இத்தாலியில் வேகமாக பரவும் கொரனா..! கமல்ஹாசன் பாடல் பாடி ஆறுதல் அடையும் அந்நாட்டு மக்கள்! ஏன் தெரியுமா?

இத்தாலி நாட்டில் கொரோனாவால் வீட்டில் தங்கியிருப்பவர்கள் தமிழ் திரைப்பட பாடல்களை பாடி மன அழுத்தத்தை குறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 7300-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1,85,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீனா நாடு அதிவிரைவாக குணமடைந்து விட்ட நிலையில், அதற்கு அடுத்தபடியாக இத்தாலி நாட்டினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் கிட்டத்தட்ட 70,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3000-க்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்தாலி நாட்டு அரசாங்கத்தினர், மக்களை பொதுயிடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனைவரையும் வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கும் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே மக்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு வகையான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டு பால்கனியில் நின்றபடி, பலரும் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் நடித்த "தேவர் மகன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "இஞ்சி இடுப்பழகி" பாடலை பாடி மன அழுத்தத்தை குறைத்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.