எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகப் பேசத் தெரியாமல் உளறிக்கொட்டுவது ஸ்டாலின் வழக்கம். அப்படித்தான் ஹித்ராஸ் சம்பவத்தில் மரணம் அடைந்த பெண் பற்றிய பேசிய விவகாரம் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உளறிக்கொட்டியே ஸ்டாலின் காரியத்தைக் கெடுத்துடுவார் போலிருக்கிறதே… ஹித்ராஸ் சம்பவத்தில் மீண்டும் உளறிய ஸ்டாலின்.

உ.பி மாநிலம் ஹித்ராஸில் தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த பெண்ணின் உடலை, குடும்பத்தினருக்குக் கூட காட்டாமல் இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி பேசாத அரசியல் கட்சிகள் இல்லை ; எழுதாத பத்திரிகைகள் இல்லை.
ஆனால் ஸ்டாலினுக்கு இந்த விவகாரம் தெரியவில்லை. அதனால் ஹித்ராஸ் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக மகளிரணி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தை தொடங்கிவைத்து பேசிய அவர், ஹித்ராஸில் குறிப்பிட்ட பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார். இதைக் கேட்டு பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி கட்சிக்காரர்களும் தலையிலடித்துக் கொண்டனர்.
இப்படி எல்லோருக்கும் தெரிந்த ஒரு விவகாரத்தைக்கூட ஒழுங்காகப் பேச முடியாமல் உளறிக் கொட்டினால், இவரை நம்பி யார் ஓட்டுப் போடுவார் என்று சொந்தக் கட்சிக்காரர்களே கடுப்பாகிறார்கள்.