பிங்க் பந்தில் விளையாடுவது கஷ்டமா இருக்கு! கோஹ்லி பரபரப்பு பேட்டி!

பிங்க் பந்தை வைத்து விளையாடுவது மிகவும் சிரமமாக உள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.


சமீபத்தில் இந்திய அணி வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, தற்போது இந்திய அணி வங்கதேச அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.

இந்தத் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெற உள்ளது . இது இந்தியா விளையாடும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை இந்திய அணி இவ்வளவு காலம் தவிர்த்து வந்தது . 

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி BCCI தலைவராக பதவி ஏற்றதும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் கலந்துரையாடி இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சம்மதம் பெற்றார். 

பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு இரு அணிகளும் சிறப்பான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மேலும் எப்போதும் பயன்படுத்துவதைப் போல சிவப்பு நிற பந்துகளை விளையாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது.

சிவப்பு நிறத்துக்கு பதிலாக பிங்க் நிற பந்து பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பந்தானது இரவு நேரங்களிலும் கண்ணுக்கு தெளிவாக தெரியும் என்பதால் இரவு பகல் ஆட்டத்தின்போது இம்மாதிரியான பந்துகள் பயன்படுத்தப்படுகிறது.

பிங்க் நிற பந்துகளை பயன்படுத்தி வீரர்கள் மிகத் தீவிரமான பயிற்சியை எடுத்துக் கொண்டு வருகின்றனர். பொதுவாகவே இந்த பிங்க் பந்தானது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்று. மேலும் இது பேட்ஸ்மேனுக்கு சற்று கடினமானது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிங்க் நிற பந்தனை பற்றிய தகவல்களை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார். மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது பிங்க் நிற பந்தை பயன்படுத்துவது சற்று கடினம் ஆகும்.

அதுமட்டுமில்லாமல் விளையாடும் போது காற்றில் எந்த அளவுக்கு ஈரப்பதம் இருக்கும் என்பதை நம்மால் முன்னரே கணிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. மேலும் பிங்க் நிற பந்தை பேட்ஸ்மேன் உயரமாக ஓங்கி அடிக்கும் பொழுது அதனை சிலரால் கேட்ச் செய்ய இயலாது. அதாவது உயரமான கேட்ச்களை பீல்டர்களால் இரவு நேரத்தில் எளிதில் பிடிக்க இயலாது. 

ஸ்லிப் கேட்ச் பிடிக்கும் போது பந்து கையை பலமாக தாக்குவதாகவும், பவுண்டரி எல்லையில் இருந்து த்ரோ செய்யும் போது, பந்தை பிடிக்க கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கோலி கூறியிருக்கிறார்.