சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது! 110வது விதியின் கீழ் முதலவர் அறிவிக்கப்போகும் பல்வேறு நலத்திட்டங்கள்!

கொரோனா காரணமாக இத்தனை நாட்களும் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்படவில்லை. இப்போது, லாக்டவுன் தொடர்பாக பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆகவே, விரைவில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.


பொதுவாக பேரவை விதிகள்படி ஆண்டுக்கு 2 முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கையும், மே, ஜூன் மாதங்களில் மானியக் கோரிக்கை விவாதமும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 24-ம் தேதி அவசர அவசரமாக கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது.

அதன்பிறகு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டும் என்பதால், இம்மாதம் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இந்த கூட்டத்தொடர் குறுகிய காலம் கொண்டதாக அமையுமாம். அதாவது, மொத்த கூட்டத்தொடரும் நான்கு நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்பதும் தெரியவந்துள்ளது. 

காத்திருப்போம்.