பூங்கோதைக்கு என்னாச்சு…? தற்கொலை முயற்சியா..? தி.மு.க. உட்கட்சி கசமுசா

தி.மு.க. என்றாலே உட்கட்சி பூசல்தான் எல்லோர் கண்ணுக்கும் தெரியவரும். அப்படியொரு சிக்கலில் மாட்டித்தான் பூங்கோதை அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


அதேநேரம், வழக்கத்திற்கு அதிகமான தூக்க மாத்திரையை போட்டுக்கொண்டதால் வந்த பிரச்னையே தவிர, தற்கொலை முயற்சி அல்ல என்று பூங்கோதை தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், அக்காவுக்கும் தம்பிக்கும் இடையிலான பிரச்னைதான் தற்கொலைக்குக் காரணம் என்றும் பேச்சு உலவுகிறது.

கனிமொழியின் ஆதரவாளராக இருப்பவர் பூங்கோதை. அதனால், அவருக்கு வரும் தேர்தலில் சீட் தராமல், பூங்கோதையின் தம்பிக்கு சீட் தரலாம் என்று கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல். அதனால்தான், பூங்கோதைக்கு பிடிக்காத சிவ.பத்மநாதனை மாவட்டச் செயலாளராக போட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பூங்கோதையை அவமானப்படுத்தி அனுப்பினார்களாம். அதற்காகத்தான் தற்கொலை முயற்சி என்கிறார்கள்.

இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ..?