தி.மு.க.,வை வீழ்த்த என் உயிரே போனாலும் பரவாயில்லை... எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.

தமிழகம் முழுக்க தேர்தல் பிரசாரம் செய்துவரும் எடப்பாடி பழனிசாமி, சிவகங்கையில் பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவரது பேச்சைக் கேட்ட தொண்டர்களும் உணர்ச்சிவசப்பட்டு கை தட்டி பாராட்டினார்கள்.


சிவகங்கை பிரசார கூட்டத்தில் முதல்வர், ‘தி.மு.க.,வை வீழ்த்த என் தொண்டை போனாலும், உயிரே போனாலும் பரவாயில்லை.உயிரை கொடுத்தாவது அதிமுகவை பெற்றி பெற செய்ய வேண்டும். எந்த நேரத்திலும் என்னை பற்றியே ஸ்டாலின் சிந்தித்து கொண்டுள்ளார், பெண்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசு அதிமுக. இந்த தேர்தலோடு திமுக எனும் குடும்ப கட்சிக்கு முடிவு விழா நடத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

முதல்வர் பதவி என்பது மக்கள் இடம் பணிகளை செய்து முடிப்பது தான். சட்டசபையிலேயே திமுகவினர் அராஜகம் செய்தவர்கள்ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது’ என்று பேசினார்.