ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும் ஒரு லட்சம் யென் அளிக்கப்போவதாக ஜப்பான் பிரதமர் கூறியிருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா நெருக்கடி..! நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கு தலா 1 லட்சம்..! அதிரடியாக அறிவித்த பிரதமர்! எந்த நாட்டில் தெரியுமா?

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,54,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 22,48,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலில் ஜப்பான் நாடு இதுவரை எந்தவித பேரிழப்பையும் சந்திக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்னர் அந்நாட்டில் 7 மாகாணங்களில் இந்த வைரஸ் தொற்று பரவியது. உடனடியாக ஜப்பான் பிரதமர் அந்த 7 மாகாணங்களிலும் ஊரடங்கு அறிவித்தார். கடந்த சில நாட்களாக வைரஸ் தாக்குதலால் இறப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதனை உணர்ந்த அந்நாட்டு பிரதமர் நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்த பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். அதன் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து விரிவான அறிக்கை வெளியிட்டார். அதாவது மே மாதம் 6-ஆம் தேதி வரை, ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்த வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதிலும் பணப்புழக்கம் குறையும் அறிந்த பிரதமர், ஊரடங்கு காலத்தில் ஜப்பான் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1 லட்சம் யென் நிவாரணமாக அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் ஒவ்வொருவருக்கும் 2 முக கவசங்களையும் அன்பளிப்பாக அளிக்கப்போவதாக கூறியுள்ளார். இந்த ஊர்டங்கினால் வருவாய் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3 லட்சம் யென் நிவாரணமாக அளிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பானது ஜப்பான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.