தோனி கேப்டன்சியில் சரியாக விளையாடாததற்கு காரணம் இதுதான்! உண்மையை போட்டுடைத்த சீனியர் பவுலர்!

தோனி கேப்டனாக இருந்தபோது வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டார்கள். ஆகையால் எங்களால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் இஷாந்த் ஷர்மா முக்கியமானவராவார். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தற்போது இந்திய அணிக்காக ஆடி வருகிறார். இவர் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகிய ஆரம்ப காலகட்டத்தில் தனது சிறப்பான பந்துவீச்சினால் ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங்கையே மிரள வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமாக இருந்தனர். இதனால் தோனி அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களையும் சுழற்சிமுறையில் பயன்படுத்தினார். ஆகையால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகிய எங்களால் ஒருங்கிணைந்து செயல்பட இயலவில்லை. இதனால் எங்களால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கோஹ்லி கேப்டனாக இருக்கும் இந்தக் காலத்தில் குறைந்த வேகப்பந்து வீச்சாளர்களே உள்ளனர். ஆகையால் எங்களால் ஒருங்கிணைந்து செயலாற்ற முடிகிறது. இதனால் இந்த காலகட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு முந்தைய காலத்தை காட்டிலும் மிகவும் சிறப்பாக உள்ளது எனவும் இஷாந்த் சர்மா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.