வேல்ஸ் கல்லூரி குழுமத்தின் தலைவராக இருக்கும் ஐசரி கணேஷ் வீட்டில் இன்று திடீரென வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அவரது வீடு, கல்லூரி என சென்னையில் மட்டும் 27 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
ரெய்டில் சிக்கிய வேல்ஸ் பல்லைக்கழக ஐசரி கணேஷ்! காரணம் தெரிஞ்சா மலைச்சுப் போவீங்க!

இதுதவிர தெலுங்கானாவில் ஐசரி கணேஷ் நடத்திவரும் கல்வி அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. தேர்தல் சமயத்தில் திடீரென ஐசரி கணேஷ் ரெய்டில் சிக்கியதை பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.
ஏனென்றால் அவர் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர். எம்.ஜி.ஆர். விழா நடத்தி வருகிறார், எம்.ஜி.ஆர். படம் எடுத்து வருகிறார். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் நடிக்கவும் செய்திருந்தார். இதுதவிர சமீபத்தில் வெளியான எல்..கே.ஜி. படத்தை தயாரிக்கவும் செய்தார். இந்தப் படம் ஹிட் அடித்ததாக கொண்டாட்டம் நடத்தினார்.
ஆனால், இதுவெல்லாம் விஷயம் அல்ல என்கிறார்கள். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்றாலும் தி.மு.க.வினர் பணத்தை பாதுகாப்பாக வைத்திருந்தாராம். தேர்தல் நேரத்தில் பணத்தை வெளியே அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார் என்று தகவல் கொடுக்கப்பட்டதாம்.
ஆளும் கட்சியின் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்று கட்சியினரிடமும் இவர் நெருக்கமாக இருக்கும் தகவல் அறிந்துதான் ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாம்.