தந்தி டிவி பாண்டே பதவியை பதம் பார்த்த வைகோ! அடங்கப்பா இப்படி ஒரு சென்டிமென்ட்டா?

தந்தி டிவியில் இருந்து ரங்கராஜ் பாண்டே விலகியதற்கு வைகோவின் சென்டிமென்ட் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.


பொதுவாக வைகோ எந்த பக்கம் இருக்கிறாரோ அந்த பக்கத்திற்கு தோல்வி தான் கிடைக்கும் என்பது அரசியல் சென்டிமென்டாக தமிழகத்தில் பார்க்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலிலும் வைகோ இடம்பெற்று இருந்த அணி தமிழகத்தில் வெற்றி பெற்றதே இல்லை. 2006ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் இணைந்து வைகோ தேர்தலை சந்தித்தார்.   இந்த தேர்தலில் தோற்று அ.தி.மு.க ஆட்சியை இழந்தது. தொடர்ந்து 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.கவுடன்இணைந்து வைகோ போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் வைகோ இடம் பெற்று இருந்த அ.தி.மு.க அணிக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் தான் 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க ம.தி.மு.கவை கழட்டிவிட்டது. வைகோ தேர்தலையே புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

   பின்னர் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க – தே.மு.தி.கவுடன் இணைந்து வைகோ களம் கண்டார். இந்த தேர்தலில் தே.மு.தி.க படுதோல்வி அடைந்தது. இதற்கும் காரணம் வைகோவின் ராசி தான் என்று விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கி வைகோ தேர்தலை சந்தித்தார். தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி படு தோல்வி அடைந்தது.

   திருமாவளவன், விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கூட தோல்வி அடைந்தனர். இப்படியாக வைகோ இடம்பெற்றுள்ள அணிக்கு தோல்வியே கிடைக்கும் என்கிற சென்டிமென்ட் வலுவாக உள்ளது. இதனால் தானோ என்னவோ? தி.மு.கவும் ம.தி.மு.கவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தயங்கி வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த நவம்பர் மாத இறுதியில் வைகோவை தந்தி டிவி பாண்டே பேட்டி எடுத்துள்ளார்.  வைகோவை பேட்டி எடுத்து முடித்த உடனேயே தந்தி டிவி நிர்வாகத்துடன் ரங்கராஜ் பாண்டேவுக்கு பிரச்சனை எழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பாண்டே தந்தி டிவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் விஜயகாந்த் அரசியல் வாழ்வை மக்கள் நலக்கூட்டணி மூலம் முடித்து வைத்த வைகோவின் ராசி பாண்டேவின் தந்தி டிவி செல்வாக்கை ஒரேடியாக கவிழ்த்துவிட்டது என்று பேசிக் கொள்கிறார்கள்.