பகுத்தறிவு பிரசாரம் செய்து கட்சியை வளர்த்த திமுகவின் பகுத்தறிவு லட்சணம் இதுதானா? கொந்தளிக்கும் இந்துக்கள்!

பகுத்தறிவு பிரசாரம் செய்து கட்சியை வளர்த்த திமுக. இப்போது பிள்ளையாரைக் காட்டி ஓட்டு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று தி.மு.க. முக்கியப் புள்ளிகளே புலம்புகிறார்கள்.


ஆனால், பகுத்தறிவு விவகாரத்தில் கோல்மால் வேலை செய்வது கருணாநிதி குடும்பத்துக்கு புதிதில்லை என்று அவர்களே விளக்கமும் சொல்கிறார்கள். இந்துக்கள் என்றால் திருடர்கள் என்று சொன்ன கருணாநிதி அதன்பிறகு சாய்பாபாவை வீட்டுக்கே வரவழைத்து மந்திர உபதேசம் பெற்றுக் கொண்டார்.

அடுத்த தலைவரான ஸ்டாலின், ‘என் மனைவியின் தெய்வ வழிபாட்டில் நான் குறுக்கிடுவதில்லை..’ என்று புத்திசாலித்தனமாக ஒதுங்கிக்கொள்வார். அதேபோன்று, ‘என் அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம், அதிலே நானும் தலையிடுவதில்லை…’ என்று கனிமொழியும் நாடகம் போடுவார்.

இவர்கள் பாணியில் இப்போது உதயநிதி வந்திருக்கிறார். ’என் அம்மா வாங்கிய விநாயகர் சிலையை பார்த்து என் மகள் ஆசைப்பட்டாள் அவளுக்காக, அவள் திருப்திக்காக போட்டோ எடுத்து என் டூவிட்டர் பக்கத்தில் வெளியிட்டேன். நானும் என் மனைவியும் பகுத்தறிவுவாதிகள்’ என்று பேசிய உதயநிதிதான் பழனியில் எப்படி கடவுளை கும்பிட்டார் என்பதை அனைவரும் பார்த்தார்கள்.

கடவுளைக் கும்பிடுவதில் திருட்டுத்தனம் எதற்காக என்பதுதான் இந்துக்களின் கேள்வி. நேரடியாக கும்பிடுவதைவிட்டு, குடும்பத்தினருக்காக என்று பம்மாத்து காட்டுவது எதற்காகவோ..?

தலைவர் வீட்டு குடும்பத்தினர் கும்பிடலாம், அது தப்பில்லை. ஆனால், ஊர் மக்கள் இந்து மதத்தை பின்பற்றினால் அது பகுத்தறிவுக்கு ஏற்றது இல்லை என்று நையாண்டி செய்வது ஏனோ..? 

பொண்டாட்டியை கடவுளை வணங்காதே என கட்டுப்படுத்த முடியாதவன்.. அம்மாவை கோயிலுக்கு போகாதே என தடை விதிக்க முடியாதவள்.. தன் மகளுக்கு இது வெறும் களிமண், வெறும் பொம்மை இதை எதற்கு போட்டோ எடுக்க வேண்டும்.. நல்ல கரடி, சிங்கம், புலி போன்றவற்றை போட்டோ எடுத்து தருகிறேன் என கடவுள் பற்றி விளக்கம் தராமல் திசை மாற்ற முடியாதவன்.. கடவுள், மத நம்பிக்கையோடு இருக்கும் தமிழர்களை, அவர்களது தெய்வங்களையும் ஏன் கொச்சைப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

சரியான கேள்விதான்.