யாருப்பா இந்த அர்ஜூன் முர்த்தி…? என்னப்பா செஞ்சார் இத்தனை நாளும்..?

ரஜினியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ரஜினியைவிட அதிகம் தேடப்பட்டவராக மாறிவிட்டார் அர்ஜூன் மூர்த்தி. தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வில் இருந்து ரஜினியிடம் சரண் அடைந்திருக்கும் அர்ஜூன் மூர்த்தி பற்றி மூத்த பத்திரிகையாளர் மாலன் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்.


அர்ஜூன் மூர்த்தி Intelectual என்பதை அறிவுசார் எனத் தமிழில் மொழிபெயர்க்கிறார்கள்.அது ஒருவேளை intellectual property என்பது தமிழில் அறிவுசார் சொத்து என மொழிபெயர்க்கப்பட்டதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.அதில் தவறில்லை.படைப்புகள் -அதில் வினைத்திறத்திற்கு ஓரளவிற்குப் பங்குண்டு என்றாலும்- அறிவு சார்ந்தவைதான்.

ஆனால் idealogy என்பது வேறு.அதை சித்தாந்தம் அல்லது கருத்தியல் என் மொழிபெயர்ப்பதுண்டு. ஆனால் நேற்று புதிய தலைமுற தொலைக்காட்சி விவாதத்தில் என்னோடு பங்கு பெற்ற ஆளூர் ஷாநவாஸ், லட்சுமணன் ஆகியோர் அர்ஜூன் மூர்த்தி பாஜகவின் சித்தாந்தவாதி என்பது போலக் கருதிக் கொண்டு பேசினார்கள். 'அறிவுசார் பிரிவின் தலைவர்' என்ற சொல் அவர்களைக் குழப்பியிருக்கக் கூடும். இன்று பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களும் ஏறத்தாழ அதே நோக்கில் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

தெய்வ சுந்தரம் நயினார் அர்ஜூன் மூர்த்தி நீங்கள் குறிப்பிட்டுள்ள அரசியல்வாதிகளைப் போல முழு நேர அரசியல்வாதி அல்ல. அவர் அடிப்படையில் ஒரு கணினி தொழில்நுட்ப வல்லுநர்.NFCதுறையைச் சார்ந்தவர். ஏழாண்டுகள் முரசொலிமாறனுக்கு அணுக்கமாக இருந்தவர்.அவர் மறைவுக்குப் பின் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்.பூத்கமிட்டி போன்ற அடித்தள வேலைகளை ஒருங்கிணைக்க அவரது ஆற்றலை ரஜனி பயன்படுத்திக் கொள்கிறார்.

அதனால்தான் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று அவர் பொறுப்புக்குப் பெயர் .அது கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் போன்றது அல்ல. அவர் சித்தாந்தவாதி அல்ல், தொழில்நுட்ப ஆற்றலாளர். Not an idealogue but a technocrat. அவர் பாஜகவில் அண்மையில் இணைந்தவர். அங்கு கொடிஒளி போன்ற (கட்சிக் கொடிக்கம்பத்தில் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் விளக்கு) திட்டங்களை வகுத்தவர்.

சுருக்கமா அவர் நல்லவருன்னு சொல்லிட்டாருங்க.