சூர்யா - ரகுல் ப்ரீத் உடல் உறவு காட்சி! செல்வராகவன் வெளியிட்ட செம தகவல்!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் செல்வா ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் NGK. இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரை அரங்கங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்களில் ஒருவர் "நடிகர் சூர்யாவிற்க்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் "அது"  நடந்ததா" என்று இயக்குனர் செல்வா ராகவனிடம் கேள்வி எழுப்பினார்.  அதற்கு மிகவும் சுவாரசியமான பதிலை செல்வராகவன் அளித்துள்ளார்.

NGK திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர்.  இந்த  படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலப்படமான விமர்சன்களே எழுகின்றன.  இருப்பினும் சென்னை பாக்ஸ் ஆபீஸ் -ஐ அடித்து நொறுக்கியுள்ளது என்றே கூறலாம். படத்தில் சூர்யா - ரகுல் ப்ரீத் இடையே உடலுறவு காட்சி கிடையாது. ஆனால் அதற்கு ஏற்ற ஒரு சூழல் இருக்கும். எனவே இருவருக்கும் இடையே அது நடந்ததா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் NGK திரைப்படத்தை பார்த்த ரசிகர்களில் ஒருவர், "நடிகர் சூர்யாவிற்க்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் "அது" நடந்ததா" என்று துண்டு சீட்டில் எழுதி ஒட்டி வைத்திருந்தார் அவர்.  அத்துடன் அந்த கேள்வியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வியாக எழுப்பி அதில் இயக்குனர் செல்வராகவனை டேக் உம் செய்து உள்ளார் அந்த ரசிகர்.

இந்த கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் செல்வராகவன், "இந்த கேள்விக்கான பதில் திரைப்படத்தின் 2-ஆம் பாதியில் உள்ளது. அதாவது சூரியாவும், ரகுலும் ஹோட்டல்  ரூமில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது நீங்கள் எதிர்பார்த்தது நடந்திருக்கும்" என்று நாசுக்காக கூறினார். இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, NGK திரைப்படம் நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு  ஒரு நரே ல்ல ட்ரீட்   என்றே கூற வேண்டும்.