கர்ப்பகால நீரிழிவு வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியுமா?

கர்ப்பகாலத்தில் நீரிழிவு பிரச்னையை முறையாக கட்டுப்படுத்தவில்லை என்றால் தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதைப் பார்த்தோம். கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு முன்கூட்டியே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள முடியும்.


·         குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு பின்னணி இருக்கும்பட்சத்தில், தாய்மைக்குத் தயாராகும்போதே மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

·         கர்ப்பம் தரிப்பது முதல் பிரசவம் வரையிலும் நீரிழிவுக்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

·         தேவைப்படும் பட்சத்தில் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் ஆலோசனைகளையும் அறிந்துகொள்ளலாம்.

·         வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறையை தெரிந்துகொள்ளவேண்டும்.

உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நீரிழிவுக்கு வாய்ப்பு உண்டு என தெரியவரும் பட்சத்தில், கருவின் வளர்ச்சி அல்ட்ராசவுண்ட் மூலம் சோதனை செய்து கண்காணிக்கப்படும். அதுபோல் பிரசவ கால குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டம் தீட்டமுடியும்.

கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்துகொண்டால், எளிதில் சிக்கலின்றி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.