ராகுல் காந்திக்கு பிரதமர் யோகம் இருக்கிறதா? இந்திய ஜோதிட ஆய்வு மையத்தின் கணிப்பு இதுதான்…

காங்கிரஸ்' கட்சியின் இளம் வயது தலைவர் ராகுல் காந்தி இன்று பிரதமர் பதவிக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார்.


எதிர்க் கட்சி தலைவர்கள் பப்பு கேலி செய்து வந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய இயல்பான செய்கைகளால் மக்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்துவருகிறார்.

பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் செய்து விட்டு திடீர் என்று மோடியை கட்டித் தழுவி அதிர்ச்சியை உண்டாக்கியவர். அன்று தொடங்கிய மோடியின் அதிர்ச்சி இன்றும் தொடர்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்றாலும் இதுவரை பிரதமர் பதவிக்கு தன்னை முன்னிலை படுத்த அவர் விரும்பவில்லை.  நல்ல  எதிர்கட்சி தலைவராக வலம் வந்தாலும் இந்த தேர்தலில் கட்சியை வெற்றி பெற வைத்து பிரதமர் பதவிக்கு வருவாரா  என்பதை ஜாதகத்தை கொண்டு ஆய்வு செய்வோம்.

1. ராகுல் காந்தி விருச்சிக ராசி கடக லக்னம் கொண்டவர் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தாலும் கேட்டை நட்சத்திரம் கோட்டை ஆளும் என்பார்கள். இவர் கோட்டை ஆள்வாரா அல்லது கோட்டை விடுவாரா என்பதை இந்த தேர்தல் ஜோதிடம் முடிவு செய்யும்.

2. இவருக்கு தற்போது செவ்வாய் திசை 2.9. 2021 வரை நடப்பில் உள்ளது தற்போது கேது புக்தி 28 .7.2019 வரை உள்ளளது. இதன் பிறகு சுக்ரன் சூரியன் சந்திர புக்திகள் வரக்கூடும் செவ்வாய் திசை பிறகு ராகு திசை வரக்கூடும்.

3.நாடு அரச யோகம் என்று சொல்லும்படியாக எதுவுமில்லை. ஆனால் எந்த கிரகம் வலுவாக இல்லையென்றாலும் குரு நன்றாக இருந்தால் போதும் சகல நன்மையும் நடக்கும் இவரை பொறுத்த வரை குரு மற்றும் சூரிய பலம் அதிகம்.

4. சூரியன் செவ்வாய் சனி ஆகிய கிரங்களை குரு பார்வை செய்வதால் அரச ஆளும் தகுதியை உருவாக்கும்

5. நீச சந்திரன் பொது ஜனவசியம் குறைவு தான் ஏதோ அரசியல் ஆர்வம் இருக்குமே தவிர முழு ஈடுபாடு இருக்காது

6. அரசியல் வெற்றிக்குரிய பாவமாக இருக்கக் கூடிய லக்னம்.5, 9, 11-ம் பாவங்களும் சரி. அதன் அதிபதிகள் சரி மத்திய பலனை தான் தரும்

7. பிரதமர் பதவி வகிக்க போதுமான சகிப்புதன்மை  நெருக்கடிகளை சமாளிக்கும் சக்தி சூரியன் செவ்வாய் தருவார்கள்.

ஆக, இவரது ஜாதகம் இப்போது நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிந்தாலும், நரேந்திர மோடி மற்றும் ராகுல் ஜாதகத்தில் யார் வலிமையாக இருப்பது என்பதைப் பார்த்தே தீர்வு சொல்ல முடியும். அதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வெளியீடு :

இறையருள் ஜோதிடர்

சூரிய நாராயண மூர்த்தி

இந்திய ஜோதிட ஆய்வு மையம் 

செல் .. 9443923665

whatsapps: 90809 07727