பொதுவாக பிறவியில்தான் இதய நோய் கண்டறியப்படுகிறது. வளர்ந்தபிறகு இதயக் குறைபாடு பெரும்பாலும் உருவாவதில்லை. அரிதாக பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளை 'சரவாங்கி’ (Rheumatic Heart Disease) என்ற நோய் தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு.
குழந்தை வளர்ந்த பிறகு இதய நோய் ஏற்பட வாய்ப்பு உண்டா..?

பொருளாதார ரீதியில் பிந்தங்கிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளிலும் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளிலும் இந்த நோய் பரவலாக இருக்கிறது.
இந்த பிரச்னைக்கு தொண்டைக் கரகரப்பு, மூட்டுவலி, மூட்டு வீக்கம், லேசான காய்ச்சல், நெஞ்சு படபடப்பு, மூச்சுத்திணறல், அடிக்கடி சளி பிடித்தல் போன்ற அறிகுறிகள் மாணவர்களுக்கு ஏற்பட்டால் இதயத்தையும் பரிசோதனை செய்யவேண்டும்.
இந்த நோய் ஏற்பட்டால், இதய வால்வுகள் சுருங்கும். வால்வுகள் சரியாக மூட முடியாமல் கசிவு ஏற்படும். இதயத்தின் இடதுபுறம் உள்ள மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே இருக்கும் ஈரிதழ் வால்வு மற்றும் சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பிறைச்சந்திர வால்வு ஆகிய இரண்டும் பாதிப்புக்கு உள்ளாகும்.
இந்தப் பிரச்னைக்கு அறுவைசிகிச்சை இல்லாமல் வால்வை விரிவுபடுத்தும் பலூன் மூலமே சரிப்படுத்திவிடலாம். மயக்கமருந்து கொடுக்கத் தேவை இல்லை.