குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் இருந்து எட்டு மாதங்களுக்குள் பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன. மூன்று வயதுக்குள் முழுமையான பால் பற்கள் வளர்ந்துவிடும். எப்படியும் விழப்போகிற பற்கள்தானே என்று இவற்றை கவனிப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது.
பால் பற்களை துலக்க வேண்டியது அவசியமா??பெற்றோர்களின் சந்தேகம்!
• புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள், பாட்டிலை வாயில் வைத்தபடியே தூங்குவதால் பால் பற்கள் பாதிக்கப்படுகிறது.
• பாலில் இருக்கும் பாக்டீரியாக்கள் பல்லில் பிரச்னையை உண்டாக்கும் என்பதால், பால் குடித்தவுடன் சிறிதளவு தண்ணீர் கொடுப்பது நல்லது.
• பால் பற்களை நல்ல முறையில் பராமரிக்கவும், பாதுகாக்கவும் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டும்.
• நிரந்தர பற்கள் முளைக்கும் நேரத்தில், சில பால் பற்கள் விழாமல் இடைஞ்சலாக இருக்கலாம். இந்த பற்களை அகற்றவேண்டியதும் அவசியமாகும்.
குழந்தைகள் விரல் சூப்புவது, கண்டதையும் வாயில் வைத்து கடிப்பதன் காரணமாக பல்லின் அமைப்பு மாறிவிடலாம். அதனால் மூன்று வயதுக்கு மேல் இதுபோன்ற பழக்கங்களை நிறுத்த வேண்டும்.