திருமண ஏற்பாடுகளில் தடை ஏற்படுகிறதா? வீட்டு வாஸ்துவில் இந்தக் குறைகள் இருக்கிறதா என்று பாருங்களேன்!

நாம் குடியிருக்கும் வீட்டிற்கு ஏற்ப தான் நமது வாழ்க்கைத் தரம் அமையும்.


கணவனுக்கு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்போம். இது இருவருக்குமே பொருந்தும். அப்படிப்பட்ட அதிஷ்டகரமான வாழ்க்கை சில பேருக்கு எட்டாக்கணியாகவே உள்ளது. சில பேருக்கு கிடைக்காமல் கூட போய்விடுகிறது. வாஸ்து சாஸ்திரத்திற்கும் திருமணத்தடைக்கும் தொடர்பு உண்டா என்பதைப் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் பார்ப்போம்.

ஒரு வீட்டில் ஆணுக்கு திருமணம் தடைபட்டாலும் அல்லது தள்ளிப்போனாலும் அந்த வீட்டில் வடக்கு, வடகிழக்கு சார்ந்த பிரச்சனைகள் இருக்கும். அதேபோன்று பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போகிறது என்றால் அந்த வீட்டில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதி மிகப்பெரிய அளவில் வாஸ்துபடி பாதிப்பில் இருக்கலாம்.

வடக்கு மற்றும் கிழக்கில் போதிய திறப்புகள் இல்லாமல் மூடிய அமைப்பில் இருப்பது. தெற்கிலும், மேற்கிலும் அதிக இடம் விட்டு கிழக்கிலும், வடக்கிலும் குறைந்த இடத்துடன் வீட்டை அமைப்பது. குடும்ப தலைவர் மற்றும் தலைவி பயன்படுத்த வேண்டிய படுக்கையறை தென்மேற்கு பகுதியில் இல்லாமல் இருப்பது.

தெரு தாக்கம், தெருப்பார்வை போன்ற அமைப்புகள் தவறான இடத்தில் வருவது. வீட்டின் பூஜையறை அல்லது சமையலறை வடகிழக்கில் அமைத்து இருப்பது.வீட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் மாடிக்கு செல்ல படிக்கட்டுக்கான அமைப்புகள் வருவது.  தென்கிழக்கு அல்லது வடகிழக்கு பகுதியில் போர்டிக்கோ அமைத்து இருத்தல்.

வீட்டிற்கான கிணறு, ஆழ்துளை கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி போன்ற அமைப்புகள் தென்கிழக்கு அல்லது வடமேற்கில் வருவது. இது மட்டுமல்லாமல் மேலும் சில தவறான அமைப்புகள் இருக்கும்போது திருமணத்தடை ஏற்படலாம்.

ஒரு அனுபவமிக்க வாஸ்து நிபுணர் தங்களுக்கான தீர்வை கொடுப்பார். அவர் மூலம் உங்களது வீட்டில் மிக சந்தோஷமான தருணத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.