அடுத்த அமீர்கான் படம் இந்த இங்கிலீஸ் படத்தின் தழுவலா? விஜய் சேதுபதி தமிழனா வர்றாரா?

அடுத்து ஆமிர் கான் நடிக்கவிருக்கும் படத்துக்கு லால் சிங் சட்டா என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.


இது 1994ல் வெளிவந்த டாம் ஹாங்க்ஸ் நடித்த ஃபாரஸ் கம்ப் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக்.நாயகன். ஃபாரஸ்ட் அன்புள்ளம் கொண்டவன். மிகவும் மெதுவாக சிந்திக்ககூடியவன்.தன் முயற்சி இல்லாமலே மூன்று அமெரிக்க ஜனாதிபதிகள்,ஜான் லெனன் என்கிற பிரபலப் பாடகர் என பல பிரபலங்கள், முதல் சக நண்பர்கள் வரை பலர் வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துகிறான்.

அவன் வியட்னாம் போரில் கலந்து கொண்ட போது அவனது படைப்பிரிவு தலைவனாக இருந்த டான் மற்றும் பப்பா என்கிற கருப்பின வீரன் அவனுக்கு நண்பர்களாகின்றனர்.போர் முடிந்ததும் ஊருக்குப் போய் படகு வாங்கி இறால் பிடித்து விற்கலாம் என்று கனவுகாணும் பப்பா போரில் இறந்து போகிறான்.டான் தனது இரண்டு கால்களையும் இழக்கிறான்.

பின்னால் பல ஆண்டுகள் கழித்து டானை சந்திக்கும் ஃபாரஸ்ட்,முன்பு பப்பா சொன்னபடி ஒரு படகு வாங்கி இறால் பிடிக்கும் தொழில் துவங்குகிறான்.அந்தக் கம்பெனிக்கே பப்பாவின் பெயரைத்தான் வைக்கிறார்கள்.அதில் வரும் பணத்தில் பப்பாவின் குடும்பத்துக்கு உதவுகிறார்கள் என்று கதை போகும்.மைக்கெல்டி வில்லியம்சன் என்கிற கருப்பின நடிகர் நடித்த அந்த பப்பா என்கிற வேடத்தில்தான் விஜய சேதுபதி நடிக்கப் போகிறார்.

அமெரிக்க பதிப்பில் கருப்பின வீரனாக இருந்த கதாபாத்திரம் இந்தி ரீமேக்கில் தமிழனாக மாற்றப்பட்டு இருக்கிறதாம். இந்த ஃபாரஸ்ட் கம்ப் படம் அந்த ஆண்டு கிட்டத்தட்ட அரைடஜன் ஆஸ்கர்களை அள்ளியது என்பது குறிப்பிடத் தக்கது.