உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சை எல்லாம் தேவைதானா?

கர்ப்பத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு சரியான உணவு முறை, முறையான உடற்பயிற்சி, பாலூட்டுதல் போன்றவை சிறந்த முறையில் பயனளிக்கிறது என்பதை பார்த்தோம். ஆனால் ஒருசிலருக்கு இவற்றால் எந்த பயனும் கிடைக்காத பட்சத்தில் கடைசி வாய்ப்பாக அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைக்கலாம்.


• அறுவை சிகிச்சையை கடைசி வாய்ப்பாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதால் உணவு, பயிற்சி மற்றும் தேவையெனில் மாத்திரை, மருந்துகள் மூலம் உடலை குறைக்கவே அதிகபட்சமாக முயற்சிக்க வேண்டும்.

• பாரியாட்ரிக் சர்ஜரி மூலம் குடல் அளவு குறைக்கப்படுவதால், உடல் எடை மளமளவென குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

• லிப்போசக்ஷன் முறையில் உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்றுவதும் உடல் பருமனை குறைப்பதில் பயனளிக்கிறது.

• குடல் வெட்டி அகற்றப்படாமல் ரப்பர் பேன்ட் போடுவதும் நடைமுறையில் இருக்கிறது.

இதுதவிர இரைப்பையின் ஒரு பகுதியை அகற்றுவதும் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.  இப்போது இந்த சிகிச்சைகள் லாப்ராஸ்கோபி முறையில் செய்யப்பட்டாலும், அறுவை சிகிச்சையின்றி உடல் பருமனை குறைப்பதே நல்லது.