பிக்பாஸ் வீட்டில் சென்ற பிக்பாஸ் தொடரின் போட்டியாளரான நடிகை கஸ்தூரி கலந்து கொண்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் அந்த நடிகையா??? பிக்பாஸ் வீட்டில் ஷாக்கிங் என்ட்ரீ!!! ரசிகர்கள் கும்மாளம்!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வார இறுதியில் சரவணன் எலிமினேட் செய்யப்பட்ட காரணத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 புரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அதில், பிக்பாஸ் வீட்டின் அறையினுள் நன்றாக கிப்ட் பேக் செய்யப்பட்ட பெரிய கவர்ச்சிகரமான பொருள் அமைந்திருப்பது போன்று தெரிகிறது. போட்டியாளர்களான லாஸ்லியா, முகேன், சாக்ஷி ஆகியோர் விரைந்து சென்று அதனை பிரித்துப்பார்க்கின்றனர்.
அப்போது அந்த பாக்ஸிலிருந்து முன்னாள் போட்டியாளரான நடிகை கஸ்தூரி வெளியே வருகிறார். அவரைக் கண்டவுடன் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் அவர் அனைவரிடமும் பேசிக்கொள்வது போன்று முதல் வீடியோ முடிவடைகிறது.
இரண்டாவது வீடியோவில், கஸ்தூரி சாக்ஷியை பார்த்து "உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்" என்று கூறுகிறார். சேரன், ஷெரின் ஆகியோரிடம் சென்று உரையாடி கொண்டிருக்கிறார். அப்போது யாரெல்லாம் எலிமினேட் ஆகியுள்ளார்கள் என்றவர் சேரனிடம் கேட்கிறார். அதற்கு அவர், மீராவின் பெயரை குறிப்பிட்டவுடன் கஸ்தூரி சேரனை கலாய்க்க தொடங்குகிறார்.
2 பிரோமோ வீடியோக்களும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கஸ்தூரியின் ஆட்டம் பாஸ் வீட்டில் நடக்கும்!!!!