கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் சேர்த்து அதிகம் சாப்பிடுவது நல்லதுதானா?

கர்ப்ப காலத்தில் உடல் எடை குறிப்பிட்ட அளவு மட்டுமே அதிகரிக்க வேண்டும் என்று பார்த்திருக்கிறோம். பெரியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு அளவுக்கு அதிகமாக உணவு எடுப்பதும், அதிக ஓய்வு எடுப்பதும் தேவைக்கும் கூடுதலாக எடையை அதிகரிக்கச் செய்துவிடும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.


    • கர்ப்ப காலத்தில் தேவைக்கும் அதிகமாக எடை அதிகரிக்கும் பெண்கள், வாழ்நாள் முழுவதும் உடல் பருமன் அவஸ்தையுடன் அவதிப்பட நேரிடலாம்.

• எந்த அளவுக்கு உடல் எடை அதிகரிக்கலாம் என்பதை மருத்துவரிடம் பேசி, உடல் பருமன் குறியீட்டு எண் அறிந்து, அதற்கு ஏற்ப மட்டுமே அதிகரிக்க வேண்டும்.

• உடல் எடை குறையாத காரணத்தால் உடலில் கொழுப்பு படிவது அதிகமாகிறது. இதனால் ரத்தவோட்டம் மற்றும் இதய கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

• கர்ப்ப காலத்தில் உடல் எடை தேவைக்கும் மேல் அதிகரிப்பவர்களுக்கு தூக்கத்தின் அளவு குறைவதாகவும் இதனால் நீரிழிவு போன்ற நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டாகிறது.

பிரசவத்திற்கு பிறகு குழந்தை வளர்ப்புக்கும், வேலைக்கு திரும்புவதற்கும் உடல் பருமனுள்ள பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். அதனால் கர்ப்ப காலத்தில் போதுமான அளவுக்கு மட்டும் எடை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை மருத்துவரிடம் ஆலோசனை மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.