ராகுல் பிரதமர் வேட்பாளர்! மு.க.ஸ்டாலினை விளாசிய மம்தா பானர்ஜி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.


  சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக கூறினார். மேலும் ராகுல் பிரதமராகி நல்லாட்சி தர வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதுநாள் வரை காங்கிரஸ் கட்சி கூட ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக கூறவில்லை.

  ஆனால் ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், சென்னையில் மு.க.ஸ்டாலின் போதிய அனுபவம் இல்லாத ஒரு தலைவரை போல் பேசியுள்ளார். தற்போது பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிவது எதிர்கட்சிகளுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கும்.

  மோடிக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறி வரும் தி.மு.க, எந்த கட்சியுடன் ஆலோசித்து ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது. இல்லை ஸ்டாலின் தனது தனிப்பட்ட கருத்தை கூறியிருந்தால் அதனை கட்சித்தலைவர்கள் ஆலோசனையில் கூறியிருக்க வேண்டும். மாறாக பொதுவெளியில் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்திருப்பது அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.


  நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும். முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்திப்பது கூட்டணிகள் உருவாவதில் சிக்கலை ஏற்படுத்தும். இதை கூட தெரியாமல் எப்படி ஸ்டாலின் அவசரப்பட்டார் என்பது தெரியவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர கூறியுள்ளார்.

  இதே போல் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததை பகுஜன் சமாஜின் மாயாவதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினரும் கூட விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது- ஏன் காங்கிரஸ் கூட தற்போது வரை ஸ்டாலின் கூறியதை வரவேற்று எந்த கருத்தையும் சொல்லவில்லை.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.