தமிழகத்தில் நான்கு மண்டலங்களில் பொதுப் போக்குவரத்து தொடங்க போகிறதோ? தீவிர ஆலோசனை..!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீடிக்கப்படும் என்பதுதான் பேசுபொருளாக அமைந்துள்ளது.


அதேநேரம், இத்தனை நாட்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து பெரும்பாலான மண்டலங்களில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்போது தமிழகம் எட்டு போக்குவரத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நான்கு மண்டலங்களில் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் மீதமுள்ள மண்டலங்களில் ஆகஸ்ட் 15க்குப் பிறகு துவங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இப்போது பிரிக்கப்பட்டுள்ள மண்டலங்கள் இவைதான். 

மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

மண்டலம் 6 : தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.

மேற்கண்டவற்றில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோவை பகுதியில் பொதுபோக்குவரத்து தற்போது தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இருந்தாலும் நாளைதான் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.