காவல்துறையில் 350 கோடி ரூபாய் ஊழல் என்று ஸ்டாலின் சொல்வது உண்மைதானா?

எதிர்க் கட்சி என்றாலே ஆளும் கட்சியின் அத்தனை நடவடிக்கைகளிலும் குற்றம் கண்டுபிடிப்பது வழக்கம்தான்.


அந்த வகையில் போலீஸ் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். 

காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவின் எஸ்.பியாக இருக்கும் அன்புசெழியன் ஐ.பி.எஸ் கடந்த ஏழு ஆண்டுகளாக காவல்துறைக்கு தகவல் தொடர்புச் சாதனங்கள் கொள்முதலில் ஊழல் செய்துள்ளார் என்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஐ.பி.எஸ், விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு, மாநில அரசும் சேர்ந்து தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்தும் தொடர்ச்சியான திட்டத்துக்கு சுமார் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தில் அன்புசெழியன் ஐ.பி.எஸ் காட்டில் பண மழை கொட்டியது.

ஹேண்ட்செட், மொபைல் செட், எமர்ஜென்சி லைட் என்று 90 வகையான காவல்துறைக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது உண்மை என்றே காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஆக, ஸ்டாலின் சொன்னதை உறுதிபடுத்திடுவாங்க போலிருக்கே..!