இத்தனை எளிமையா நம் முதல்வரிடம்... அசந்துபோன அதிகாரிகள்... பாராட்டும் பொதுமக்கள்

ஆட்சியில் இருந்தால் குறிப்பாக முதல்வர் பதவியில் இருந்தால், இந்த உலகமே தனக்குத்தான் சொந்தம் என்பது போன்று பந்தா செய்வதுதான் அரசியல்வாதிகளின் வழக்கம். ஆனால், வேட்புமனு தாக்கல் செய்த விவகாரத்தில் தன்னுடைய எளிமையால் மக்கள் மனதை அள்ளியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


எடப்பாடி தொகுதியில் 7வது முறையாக போட்டியிடும் முதல்வர் இன்று அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தாலுகா அலுவலகத்திலிருந்து நூறு மீட்டருக்கு முன்பு காரை நிறுத்தச் சொன்னவர், அங்கிருந்து ஒற்றை மனிதராக நடக்கத் தொடங்கினார். ஒரு உதவியாளர் கூட இல்லாமல் முதல்வர் நடந்து செல்வதை பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். 

வேட்புமனுவை தானே கையில் தூக்கிச் சென்றார். தேர்தல் அதிகாரிக்கு வணக்கம் சொன்ன முதல்வர் நின்றபடியே அதனை அவரிடம் கொடுத்தார். சேரில் உட்கார்ந்தபடியே மனுவை பரிசீலித்த அதிகாரி, பின்னர் ஓகே சொன்னதும், அதேமாதிரி ஒற்றை மனிதராக நடந்து காருக்கு திரும்பினார்.

சாதாரணமாக மனு தாக்கல் செய்பவர்களுடன் இரண்டு பேர் செல்ல முடியும்.தேர்தல் விதியும் அதை அனுமதிக்கிறது. ஆனால் அதைக் கூட தவிர்த்துவிட்டு ஒன்மேன் ஆர்மியாக களமிறங்கிய எடப்பாடியின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற்து.