நாகலாந்தில் நாய்களின் இறைச்சி சாப்பிடுவது இயல்பாகிவிட்டதா? இனிமேல் கூடாது.. நாகலாந்து அரசு திடீர் அறிவிப்பு!

சீனாவில் மட்டும்தான் நாய்க்கறி புழக்கத்தில் இருக்கிறது என்பதை உடைக்கும் வகையில், சமீபத்தில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சாக்கினால் உடல் முழுவதும் கட்டிவைக்கப்பட்டு, தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்த நாய்கள், நாகலாந்துக்கு அனுப்பப்படுவதாக அந்த செய்தி வெளியானது. அதன்பிறகுதான், வட கிழக்கு இந்திய மாநிலமான நாகலாந்தில் நாய்களின் இறைச்சி சாப்பிடுவது இயல்பாக நடப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து நாய் இறைச்சி உண்பதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று விலங்குகள் நல அமைப்பினர் கடுமையாக வலியுறுத்தினார்கள். உடனே, நாய் இறைச்சி இறக்குமதிக்கும், நாய்களைக் கொல்வதற்கும் தடை விதித்து உத்தரவு போட்டுள்ளது. 

ஆனால், இதற்கு வாய்ப்பு இல்லை என்று நாகலாந்து மக்கள் கருதுகிறார்கள். ஏனென்றால், நாய்க்கறி மட்டும்தான் மிகவும் மலிவான விலையில் கிடைப்பதாகவும், அதனால் ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் நாய்கள் இறைச்சி தேவைக்காக நாகலாந்து மாநிலத்திற்கு கடத்தி வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மக்களூம் பாவம்தான்… நாயும் பாவம்தான்.