காரமான உணவு சாப்பிட்டால் சீக்கிரம் பிரசவ வலி வருமா?கர்பிணிகள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது ..

கர்ப்பம் அடைந்த கணத்தில் இருந்து ஒவ்வொரு பெண்ணும் எப்போது பிரசவம் நிகழும், எப்போது குழந்தையை கையில் வாங்கிக் கொஞ்சுவோம் என்ற எண்ணத்தில்தான் இருப்பாள். மருத்துவர் குறிப்பிட்ட தேதியில் குழந்தை பிறக்காமல் தாமதமாகும் பட்சத்தில், சிலர் காரமான உணவு சாப்பிடச் சொல்லி பரிந்துரைப்பதுண்டு. இது பலனளிக்குமா என்று பார்க்கலாம்.


• காரமான உணவுகளை சாதாரண காலத்திலேயே உட்கொள்ளக்கூடாது எனும்போது கர்ப்ப காலத்தில் நிச்சயம் பயன்படுத்தக்கூடாது.

• காரமான உணவு சாப்பிட்டால் பிரசவ வலி உடனடியாக ஏற்படும் என்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது.

• ஆனால் காரமான உணவு சாப்பிடும் பெண்களுக்கு டயோரியா ஏற்படுவதற்கும் வயிற்று வலி உண்டாகவும் வாய்ப்பு உண்டு.

• இந்த பிரச்னைகளுக்காக மருத்துவமனைக்கு செல்லும்போது, குழந்தையை காப்பாற்றுவதற்காக மருத்துவர் பிரசவம் நடத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வது நிகழலாம். 

அதனால் எந்தக் காரணம்கொண்டும் கர்ப்பிணிக்கு காரமான உணவு கொடுப்பது நல்ல ஆலோசனை கிடையாது. ஒருசில கர்ப்பிணிகளுக்கு காரமான உணவு எதிர்விளைவுகளை உண்டாக்கிவிடலாம்.