கொரோனா தொற்று அறிகுறியா..? எடப்பாடி பழனிசாமி 2,500 ரூபாயில் ஒரு புதிய திட்டத்தை இன்று அறிமுகம்!

இந்த நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக, கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்காக, 2,500 ரூபாயில் ஒரு புதிய திட்டத்தை இன்று எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சியின் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தார்.


‘அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டம்’ என்னும் இந்தத் திட்டம், கொரோனா அறிகுறிகளுடன் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

இந்தத் திட்டத்தில் ரூ.2,500 மதிப்பிலான பரிசோதனை கருவிகள், மருந்துகள், மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது. இதய துடிப்பையும், ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மற்றும் டிஜிட்டல் தெர்தல் மீட்டர் போன்ற உபகரணங்களும் அடங்கும்.

மேலும், 14 நாட்களுக்கு தேவையான விட்டமின் சி மற்றும் டி மாத்திரைகள், கபசுகுடிநீர் தூள், 14 முகக்கவசங்கள், சோப்பை ஆகியவையும் வழங்கப்படுகிறது. இனிமேல் கொரோனாவைக் கண்டு அஞ்சுவதற்கு எதுவுமே இல்லையே.