வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தையா ??

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு காலம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நேரங்களில் கர்ப்பம் குறித்து யார் என்ன சொன்னாலும் ஆர்வமாக கேட்பார்கள். அதனால்தானோ என்னவோ கர்ப்பம் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவற்றில் எதுவெல்லாம் பொய் என்பதை ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகும்.


·         கர்ப்பிணிகளின் வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் பெரிய வயிறு என்றால் பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்..

·         வயிற்றின் அளவுக்கும் ஆண், பெண் என்ற பாலினத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை.

·         பெண்ணின் உடலின் தன்மை, வயது, எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து போன்ற பல்வேறு காரணங்கள்தான் வயிற்றின் அளவை தீர்மானிக்கின்றன.

·         பெண்ணின் வயிற்றில் இருக்கும் கொழுப்பின் அளவைப்பொறுத்தும் வயிறு சிறிதாக அல்லது பெரிதாக தோற்றமளிக்கலாம்.

பொதுவாக இரண்டாவது பிரசவத்தின்போது பெண்களின் தசைகள் வலுவிழந்து காணப்படும் என்பதால் வயிறு சிறியதாகவே தென்படும். அதனால் பெண்ணின் வயிறுக்கும் ஆண், பெண் பாலினத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுதான் மருத்துவரீதியான உண்மை.