கொழுக் மொழுக் நமிதாவுக்கு என்ன ஆச்சு? இப்டி மெலிந்துவிட்டார்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை நமீதா உடல் இளைத்துப்போன புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


2003-ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த "எங்கள் அண்ணா" திரைப்படத்தின் மூலம் நடிகை நமீதா கோலிவுட்டுக்கு அறிமுகமானார். அதன்பின்னர் அவருடைய உடல் கொழுத்துப்போய் இருந்ததால் கிளாமர் ரோலில் நடிக்க தொடங்கினார்.

கவர்ச்சியாக நடிக்க தொடங்கிய பின் அவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் பல கோலிவுட் திரைப்படங்களில் தன்னுடைய கவர்ச்சியின் மூலம் பல கோலிவுட் திரைப்படங்களில் தன்னுடைய கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்திழுத்தார்.  2010 ஆம் ஆண்டு வரை திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த நமிதா அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.

2016-ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான புலிமுருகன் என்னும் திரைப்படத்தில் நடித்தார். மீண்டும் திரை உலகத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது திடீரென்று தொழிலதிபர் ஒருவரை திருமணம் புரிந்தார். 

சில நாட்களுக்கு முன்னர் நமிதாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின. உடல் மிகவும் மெலிந்து போய் காணப்படுகிறார். இந்த புகைப்படங்களை கண்ட நமிதாவின் ரசிகர் பட்டாளம் அவருக்கு என்ன ஆனது என்று சமூக வலைதளங்களில் குமுறி கொண்டிருக்கின்றனர். நமிதாவின் புகைப்படங்கள் நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.