சுடுகாட்டில் இருந்து சாலைக்கு வந்து காருக்குள் புகுந்த மர்ம பூத உருவம்..! ஈரோடு அமானுஷ்யம்!

நடுரோட்டில் வெள்ளையாக பேய் உருவம் கொண்ட ஒன்று அலைவதாக மக்கள் அஞ்சுவது ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோட்டிலிருந்து சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்ட எல்லையில் காவிரி ஆறு பாய்ந்து ஓடுகிறது. இந்த ஆற்றங்கரை பகுதிக்கு அருகே சுடுகாடு ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் இறப்பவர்கள் யாராக இருப்பினும் இந்த சுடுகாட்டில் தான் புதைக்கப்படுவது வழக்கம். இங்கு எரிப்பதற்குரிய தகன மேடையும் அமைந்துள்ளது.

இந்த பகுதி வழியாக தான் பிற மாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. இதனால் காவல்துறையினர் செக்போஸ்ட் அமைத்து தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் சோதனை செய்து வருகின்றனர். அவ்வாறு சில நாட்களுக்கு முன்னால் சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து பார்த்ததில் வெள்ளை நிற உருவம் ஒன்று கேமரா பதிவுகளில் காட்சியாக தெரிந்துள்ளது.

நெருங்கி வரவர அந்த உருவம் உயரமாக தொடங்கியுள்ளது. செக்போஸ்டில் பரிசோதனை செய்து கொண்டிருந்த காவல்துறையினர் பெரிதும் பயந்தனர். அருகிலேயே சுடுகாடு அமைந்திருப்பதால் நிச்சயமாக பேயாக இருக்குமோ என்ற அச்சம் இவர்களுடைய உள்ளத்தில் ஆட்கொண்டுள்ளது. தற்போது இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோவை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களுடைய பகுதியில் பேய் தொல்லை அதிகரித்துள்ளதா என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.