நாடு முழுவதும் மேலும் எத்தனை நாள் ஊரடங்கு நீட்டிப்பு..? முடிவெடுக்கும் மோடி!

நாடு முழுவதிலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தியா முழுவதிலும் 20,471 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 3,960 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 652 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதிலும் நோய் பரவலை தடுப்பதற்காக மே-3-ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு முடிவடைவதற்கு இன்னும் 10 நாட்களில் மீதமுள்ள நிலையில், அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி வரும் 27-ஆம் தேதியன்று, பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் காணொளியில் சந்திக்கவுள்ளார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அப்போது அந்தந்த மாநிலத்தில் இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் குறித்து கேட்டறிந்து, ஊரடங்கு உத்தரவு எவ்வாறு தளர்த்துவது என்பது குறித்து கலந்தாலோசிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 3 நிறங்களாக இந்தியாவின் மாவட்டங்கள் முழுவதும் பிரிக்கப்பட்டுள்ளன. இது வைரஸ் தாக்குதல் மிகவும் குறைவாகவுள்ள மாவட்டங்கள் பச்சை நிற மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் குறைவான தாக்குதலே சந்தித்து வரும் நிலையில், எவ்வாறு மாவட்டத்தின் ஊரடங்கை தளர்த்துவது என்பது குறித்தும் ஆலோசிக்க போவதாக கூறப்படுகிறது.

இன்னும் 10 நாட்களே மீதம் இருப்பதால் ஊரடங்கு குறித்து ஆலோசித்து, வைரஸ் தாக்குதலுக்கு ஏற்றவாறு மாநில முதலமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க பிரதமர் அறிவுறுத்த போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 27-ஆம் தேதியன்று ஊரடங்கு நீட்டிக்கப்பட போகிறதா அல்லது இடங்களுக்கு ஏற்றவாறு நீட்டிக்கப்பட்ட போகிறதா என்பது குறித்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.