திவால் ஆகிறதா வோடபோன் ஐடியா நிறுவனம்..? வாடிக்கையாளர்கள் நிலை என்னாகும் தெரியுமா?

வோடபோன் ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனம் திவால் நிலைக்கு செல்ல காரணம் என்ன.?இந்த நிறுவனம் திவால் அடையும் பட்சத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் என்ன என்று விவரிக்கிறது இந்த கட்டுரை.


இந்திய தொலைத் தொடர்புத் துறையின் அசைக்க முடியாத சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நிறுவனம் வோடாபோன் ஐடியா. தற்போது கடன் மற்றும் கடுமையான நஷ்டத்தின் காரணமாக திவால் நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தோல்வி என்பது தொலைத் தொடர்புத் துறைக்கு அப்பாற்பட்டு. வங்கிகள் மற்றும் உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. கடுமையான நஷ்டத்தை சந்தித்து உள்ள இந்த நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்படும் பட்சத்தில் இதன் வசமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வகையில். ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் சரியான உட்கட்டமைப்பு இல்லை என்பது அதிர்ச்சிக்குள்ளான விஷயமாகும்.

அதுமட்டுமின்றி வோடபோன் ஐடியா நிறுவனங்களில் வாடிக்கையாளர்களை இணைக்கும் பட்சத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஏர்செல். யூனிநார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் திவாலாகி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனமும் கடும் நஷ்டத்தில் சிக்கி தொலைத்தொடர்புத் துறையை விட்டு வெளியேறும் பட்சத்தில்.! இந்திய மற்றும் உலக முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய தொலைத் தொடர்புத் துறைக்கும் நிதித்துறைக்கும் கடுமையான சவாலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

எனவே மத்திய அரசு தொலைத்தொடர்பு துறை மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் ஒன்றிணைந்து அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

வோடாபோன் ஐடியா நிறுவனம் இந்திய தொலைத் தொடர்புத் துறையை விட்டு வெளியேறும் பட்சத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே சேவை வழங்கும் என்ற காரணியை கருத்தில் கொண்டால்.!

இந்த இரண்டு நிறுவனங்களின் மாத சந்தா கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் கிராமப்புறம் சார்ந்த தொலைத் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கின்றது தொலைதொடர்புத் துறையின் அறிக்கை. 

இந்த குழப்பத்தில் இருந்து மத்திய அரசு சரியான முடிவு எடுக்காத பட்சத்தில், இந்த நிறுவனத்தில் உள்ள சுமார் 3 கோடி இந்தியர்களின் தொலைபேசி சேவை முற்றிலுமாக முடங்கிப் போக வாய்ப்பு உள்ளன.

மேலும் இந்திய பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் விலை கடந்த ஒரு ஆண்டில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 23 ரூபாயாக இருந்த வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள். இன்றைய மதிப்பில் 3 ரூபாய் 98 பைசாவாக வர்த்தகமாகி வருகிறது. சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விலை வீழ்ச்சி.

இந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் உயரதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளனர். ஏற்கனவே கடன் மட்டும் நஷ்டத்தில் திவாலாகி வரும் அந்த நிறுவனம் மிக ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை அறிந்துள்ள வங்கி அதிகாரிகள். அரசு மற்றும் மத்திய கணக்கு தணிக்கை துறையிடம் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்டு உள்ளதாக தெரிகிறது.

வோடபோன் நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 27 ஆயிரம் கோடியை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது சுமார் 3500 கோடியை திருப்பி செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்யும்படி மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் மன்றாடி வருகிறது.

பாரத ஸ்டேட் வங்கி 29,000 கோடி இந்தஸ் இந்த் வங்கி 5000 கோடி ஐசிஐசிஐ வங்கி 1700 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி 1000 கோடி என பல்வேறு வங்கிகள் சுமார் 53 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கி உள்ளன வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு.

ஏற்கனவே இந்திய தொலைத் தொடர்புத்துறை சுமார் 7 லட்சம் கோடி கடனில் உள்ள இந்த நிலையில். மத்திய அரசும் மத்திய கணக்கு தணிக்கை குழுவும் தொலைதொடர்புத் துறை மற்றும் உச்சநீதிமன்றம் இணைந்து. நஷ்டத்தை சந்தித்துள்ள இந்த நிறுவனங்களுக்கு மூலதன மறுவாழ்வு அளிக்காத பட்சத்தில்.! இந்திய உள்நாட்டு உற்பத்தி கடுமையான வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புக்கள் உள்ளன.

பிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதத்திற்கும் கீழே போயுள்ளது. உலக பொருளாதார மந்தநிலை. சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதல். அமெரிக்க அரபு நாடுகளுக்கான போர் பதட்டம் காரணமாக எதிர்காலத்தில் இந்திய உள்நாட்டு உற்பத்தி கடுமையான வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர் உலக முதலீட்டாளர்கள்.

ஐடியா வோடஃபோன் நிறுவனத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் நேரடிப் பணியாளர்களாக இருப்பதாகவும். இந்த நிறுவனம் திவால் அடையும் பட்சத்தில் இவர்கள் வேலையிழப்பைச் சந்திக்க உள்ளதால். நாட்டில் வேலைவாய்ப்புகள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர். 

ஒட்டுமொத்த தொலைத்தொடர்புத்துறையும் வீழ்ச்சியில் இருக்கும் இந்த சூழலில், நிலுவைத்தொகையைத் திரும்பச்செலுத்துவதில் விலக்கு அளித்து பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள மத்திய அரசு முன்வரவேண்டும் என்று காத்திருக்கிறது வோடபோன் ஐடியா நிறுவனம்.

மணியன் கலியமூர்த்தி