நாளை முதல் மீண்டும் டாஸ்மாக் திறப்பு!? வைரலாகும் தகவலின் உண்மை நிலை என்ன?

நாளை முதல் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் உலா வரும் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோ‌‌ஷ்குமார், அரசு அறிவித்தபடி வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு தான் இருக்கும் என திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.


உலகையே உலுக்கி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்த வைரஸ் தொற்று எதிலிருந்து பொது மக்களை காப்பாற்றுவதற்காக 21 நாட்களுக்கு144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளது. 

இதனை அடுத்து டாஸ்மாக் கடைகள், பேருந்துகள் , ஷாப்பிங் மால்கள் , சினிமா தியேட்டர்கள் போன்றவை இயங்காது எனவும் அத்தியாவசிய தேவைகளான சூப்பர் மார்க்கெட், மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியவை மட்டும்தான் இயங்கும் எனவும் அரசு அறிக்கையில் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னிலையில் டாஸ்மாக் கடைகள் ஆனது நாளை முதல் திறக்கப்படும் என சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்று பரவி வந்தது. இதனை அடுத்து பலரும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோ‌‌ஷ்குமார் , அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பில் மத்திய அரசு கூறியபடி வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டில் இருக்கும். அதுவரை டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு தான் இருக்கும் என்று கூறினார். இந்த செய்தியானது முற்றிலும் வதந்தி தான் என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 5, 299 டாஸ்மாக் கடைகளும் கடந்த 23-ந்தேதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னாள் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி அடுக்கி கொண்டனர். கடந்த 23ஆம் தேதி மட்டும் மாலை 6 மணி வரை  ரூ.210 கோடிக்கு மது விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.