திடீர் சந்திப்பின் பகீர் பின்னணி! விஜயகாந்தை பழி வாங்குகிறாரா ஸ்டாலின்? கொந்தளிக்கும் துரை தயாநிதி!

கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. வெற்றிபெறாமல் போனதுக்குக் காரணம் விஜயகாந்த்... அந்த கோபத்தை தீர்த்துக்கொண்டாரா ஸ்டாலின் என்று பேச்சு அடிபடுகிறது.


யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வெள்ளிக்கிழமை மதியம் விஜயகாந்த் வீட்டுக்குப் போய், அவரை சந்தித்து அன்பைப் பொழிந்திருக்கிறார் தி.மு... தலைவர் ஸ்டாலின். உடல்நலம் விசாரிப்பதற்காகத்தான் விஜயகாந்தை பார்த்திருப்பதாக சொல்லப்பட்டாலும், இதன்பின்னே பழி வாங்கும் அரசியல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏனென்றால் இப்போது தே.மு.தி..வுடன் அ.தி.மு.. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியை விட ஒரே ஒரு சீட் அதிகம் வேண்டும் என்று பேச்சுவார்த்தை தொடங்கியது. விஜயகாந்த் உடல்நிலை தேர்தல் பிரசாரத்துக்கு தயாராக இல்லை என்றதும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்த விவகாரம் தெரியவந்ததும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். அரசியல் பேசினோம் என்று சொன்ன திருநாவுக்கரசர், விஜயகாந்த் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.இதையடுத்து தி.மு.. கூட்டணியில் சேரமுடியுமா என்று யோசனை நடந்தது.

இந்த யோசனைக்கு பச்சைக்கொடி காட்டுவது போன்று இன்று ஸ்டாலின் தானாகவே முன்வந்து விஜயகாந்தை சந்தித்து பெரும் பரபரப்பைக் கிளப்பினார். அதுமட்டுமின்றி கருணாநிதிக்கும் விஜயகாந்துக்கும் உள்ள உறவையும் நெருக்கத்தையும் சொல்லி, தி.மு..வுக்கு ஆதரவானவர் என்ற நிலையை உருவாக்கினார்.

.தி.மு..வுடன் பேசிவந்த சூழலில் திடீரென 40 தொகுதிக்கும் விருப்ப மனு கேட்டு தே.மு.தி.. அறிக்கை கொடுத்ததை எடப்பாடி ரசிக்கவில்லையாம். அதனால்தான் ஹெச்.ராஜா மூலம் விதண்டாவாதமாக ஓர் அறிக்கை கொடுக்கப்பட்டது.

இப்போது அ.தி.மு..வில் தே.மு.தி..வுக்கு அதிகபட்சம் 6 தொகுதிகள் கொடுப்பதற்கு தயாராகிவிட்டார்கள். இந்தத் தகவல் தெரிந்து, அதனை உடைத்துக்கட்டவே ஸ்டாலின் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. இப்போது தி.மு..வுடனும் தே.மு.தி.. பேசுவது தெரியவந்தால் நிச்சயம் எடப்பாடி டென்ஷனாவார்.

அதனால் விஜயகாந்துக்கு கூட்டணிக்கு சீட் கொடுப்பது தொடங்கி, செலவுக்கு பணம் கொடுப்பது வரையிலும் சிக்கல் உண்டாகும் என்று நம்புகிறார் ஸ்டாலின். அதனால் அ.தி.மு..வில் இருந்து விஜயகாந்த் வெளியேறி தனித்து நிற்கவேண்டிய சூழல் இருக்கும் என்று நம்புகிறார். ஏனென்றால் தி.மு..வுக்கு ஒருவேளை விஜயகாந்த் வருவதாக இருந்தாலும் அதிகபட்சம் 5 தொகுதிக்கு மேல் தரமாட்டார். இதற்கு தே.மு.தி.. ஒப்புக்கொள்ளாது.

இதைவிட, தேர்தலுக்கு பணம் கொடுப்பதை ஸ்டாலின் செய்யமாட்டார். ஆனால், .தி.மு.கவில் நிச்சயம் கேட்ட பணம் கிடைக்கும். எனவே எப்படியும் எடப்பாடியுடன் விஜயகாந்த் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே இன்று போய் பார்த்துவந்திருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் வீசிய வலையில் விஜயகாந்த் விழுந்துவிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதைத்தான், விஜயகாந்துக்கு உடல் சரியில்லை என்பது இப்போதுதான் தெரிந்ததா என்று ட்வீட் போட்டு தெறிக்க விட்டிருக்கிறார் துரை தயாநிதி அழகிரி.

எப்படியோ இன்னும் சில நாட்களுக்கு செம ஜாலிகள் காத்திருக்கிறது.