சூர்யா படத்தில் செந்தில் கணேஷ்..? லீக் செய்த ஜி.வி.பிரகாஷ். - சூரரைப் போற்று தாறுமாறு

நடிகர் சூர்யா நடித்து கொண்டிருக்கும் புது படத்தின் ஓப்பனிங் சாங்கை பற்றி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்களை துள்ள வைத்துள்ளது.


நடிகர் சூர்யா நடித்து இந்த வருடத்தில் 2 படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டது. முதல் படமான என்.ஜி.கே வெளியாகி பிரமாண்ட வெற்றி அடைந்துள்ளது. அடுத்த மாத இறுதியில் "காப்பான்" படம் வெளியாக உள்ளது. 

இதற்கிடையே சூர்யா புது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். "சூரரை போற்று" என்று அப்படத்திற்கு தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசயமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "சூரரை போற்று" படத்தின் ஓபனிங் சாங் பற்றி ஒரு அப்டேட் தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த படத்தின் ஓப்பனிங் சாங்கை, சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்கணேஷ் பாடியுள்ளதாக கூறியுள்ளார். இது ஒரு குத்துப்பாட்டு என்றும் பாடல்வரிகளை ஏகாதேசி என்பவர் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தப் படத்தை சுதா கொங்கரா என்பவர் இயக்கியுள்ளார். அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டவுடன் சூர்யா ரசிகர்கள் காற்றில் மிதக்கும் அளவிற்கு இன்பமடைந்து உள்ளனர்.