நதி நீர் இணைப்பும் - நிதின் கட்கரி பேட்டியும் வாட்ஸ் ஆப் வதந்தியே! உண்மைய தெரிஞ்சிக்கங்க!

தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் நதி நீர் இணைப்பு குறித்து இந்தியா டுடே தொலைக்காட்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாக வெளியாகி வரும் தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.


தேர்தல் முடிந்த மறுநாள் முதலே வாட்ஸ் ஆப்பில் நிதின் கட்கரி இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அந்த தகவல் பின்வருமாறு

நேற்று திரு. நிதின் கட்கரி, இந்தியா டுடே தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார்..

இரண்டாம் முறை பெருவெற்றி பெற்ற பிஜேபி, நாட்டிற்கு தங்களின் மூலமாய் அடுத்து  செய்யப்போவது என்ன ? என்று ராகுல்கன்வல் கேட்க, கண்களில் நீர் ததும்பியபடி, திரு. கட்கரி சொன்னது என்ன தெரியுமா ??

" .. எங்களது முதல் ஆட்சி காலத்தில், தேசம் முழுதும் நெடுஞ்சாலைகளை இணைத்து தேசம் அனைவருக்கும் ஒன்று காட்டினோம்.  இந்த 5 ஆண்டு காலத்தில், எப்படியேனும், நதிகளை தேசியமயமாக்கி, கங்கா- கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்தால், காவிரியும் இணையும்.. இதனால், தேசம் மட்டுமின்றி, குறிப்பாக தமிழ்நாட்டின் நெடு நாளைய நீர் பிரச்சனை தீர்ந்து, விவசாயமும், நீர் வளமும் செழித்து, தமிழர்கள் நிரந்தர பயன் பெறுவார்கள்.." என்றார். 

இதை சொல்லி முடிக்கும் போது, அவரது கண்ணில் இருந்து, ஒருதுளி நீர் மண்ணில் விழுந்தது. 

இதை பார்த்த என்னால், எனது கண்ணீரை அடக்காமல் இருக்க முடியவில்லை...

 "நட்டுகிட்டு சாகலாம்டா.. தமிழர்களா..தூ..தூ.." மானங்கெட்டதமிழ் துரோகிகளா....

"இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யக்கால்...."

பாரத் மாதாகி ஜே.

இப்படி இருந்தது அந்த வாட்ஸ் ஆப் செய்தி. அதன் பிறகு இன்று திடீரென இதனையே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒரு வாட்ஸ் ஆப் தகவல் வேகமாக பரவி வருகிறது. அந்த தகவல் பின்வருமாறு 

I was watching Nitin Gadkariji's interview in India Today TV, around 10.30 in the night yesterday - one of his answers brought instant tears in my eyes.

When Rahul Kanwal asked him what were his plans for the second term, Gadkariji said, "in the first term we concentrated a lot on highways - in the second term, we will concentrate on waterways - my first job would be to link Godavari and Krishna and thus bring water to Tamilnadu, which is facing repeated water problems"

What a man ! only yesterday, the whole Tamilnadu had voted totally against BJP, still the first plan he has is for the development of Tamilnadu !

This is the party that TN has failed to recognize !

அதாவது தமிழகத்தில் பாஜகவை தோல்வி அடையச் செய்ததை பொருட்படுத்தாமல் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படுவது குறித்து நிதின் கட்கரி அந்த பேட்டியில் உறுதிபட தெரிவித்திருந்ததாக கூறுவது தான் அந்த வாட்ஸ் ஆப் செய்தியின் சாராம்சம். உண்மையில் நிதின் கட்கரி அப்படி ஒரு பேட்டியை இந்தியா டுடேவுக்கு கொடுத்துள்ளாரா என்று விசாரித்த போது இல்லை என்று தான் பதில் கிடைத்தது. 

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று நாக்பூரில் கட்கரி செய்தியாளர்களை தான் சந்தித்துள்ளார். அப்போதும் கூட அவர் தமிழகத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது தான் நிஜம். உண்மை இப்படி இருக்க இதனை தெரிந்து கொள்ளாமல் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூட இந்த வாட்ஸ் ஆப் வதந்தியை பதிவு செய்தது தான் உச்சகட்ட காமெடி. https://twitter.com/BJP4TamilNadu/status/1132085000407404544