ஓரினச்சேர்க்கை உறவு! ஸ்ரீதேவியின் மகள் வெளியிட்ட துணிச்சல் தகவல்!

மறைந்த பாலிவுட் பிரபலமான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஓரினச்சேர்க்கை பற்றி பேட்டி அளித்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மறைந்த பாலிவுட்டின் முன்னாள் கனவுக் கன்னியான நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளின் பெயர் ஜான்வி கபூர். இவர் தற்போது வெற்றி வலம் வரும் பாலிவுட் நடிகைகளில் ஒருவராவார். இவர் கைவசம் நிறைய திரைப்படங்கள் உள்ளன.

குஞ்சன் சக்சேனா இயக்கும் கார்கில் வார் பற்றிய திரைப்படமும், காமெடி திரைப்படமான "ரூஹி அப்ஸா" மற்றும் "தோஸ்தானா-2" ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் நடிக்கும் தோஸ்தானா-2 படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்தது. அப்போது ஜான்வி கபூர், "இந்த படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தின் கதை மிகவும் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஓரினச்சேர்க்கையாளர் பற்றி கூறப்படுவதை கேட்பதற்கு எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது" என்று பதிலளித்தார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கரண் ஜோஹர் பேசிய போது, "இந்த படம் வெளியாவதற்கு நான் மிகவும் காத்திருக்கிறேன். கார்த்திக் ஆரியன் மற்றும் ஜான்வி கபூர் இடையே உள்ள காதலின் மூலம் படம் மிகப்பெரிய வெற்றி அடையும்" என்றும் கூறினார்.

பேட்டியில் ஜான்வி கபூர் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக பேசியதற்காக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.