சவூதி எண்ணெய் வயல் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது ஈரானா அல்லது ஏமனா? சிக்கல் என்னவோ இந்தியாவுக்குத்தான்!

பெட்ரோல் தட்டுப்பாடு வருகிறது. சவுதி எண்ணெய் வயலில் ஏமன் நாட்டு ஹவுதி படை ட்ரோன் தாக்குதல்.


சவுதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ நிறுவனத்தின் குரைஸ் எண்ணெய் வயல்கள் மீதும்,ஆயில் ரீஃபைனரி மீதும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

இந்தத் தாக்குதலில் மொத்தம் 10 ட்ரோன்கள் பயண்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.புக்யக் என்கிற இடத்தில் அமைந்துள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உலகிலேயே மிகவும் பெரியது.இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல் அதாவது 140 கோடி லிட்டர் பேட்ரோல் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியா உட்பட பல நாடுகள் இதைத்தான் நம்பி இருக்கின்றன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய நீண்டகாலம் தேவைப்படும் என்று தெரிகிறது. இப்போதைக்கு இங்கு பெட்ரோல் உற்பத்தி மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப் பட்டு விட்டது.எண்ணெய் உற்பத்தியை சவுதி அரசு குறைத்து இருப்பதால் பெட்ரோல் விலை உயரும் அபாயம் இருக்கிறது.

அதோடு,பெட்ரோல் பொருட்களுக்கு தட்டுப்பாடும் வரலாம்.ஏமனில் போராடிக்கொண்டு இருக்கும் ஹவுதி அமைபு தங்கள் மேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்தப் படாவிட்டால் நிலமை இன்னும் மோசமாகும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் யாகியா சாரி எச்சரித்து இருக்கிறார்.

இந்தத் டிரோன் தாக்குதலின் பின்னணியில் இருப்பது ஈரான் நாடுதான் காரணம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டி இருக்கிறார். சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்க.தங்கள் நாடு தயாராக இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.