செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் அபாயம்! செய்திப் பிரியர்கள் செய்ய வேண்டியது என்ன?

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக செய்தி பிரியர்களுக்கு இடையில் அச்சம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தன்னுடைய கோரத்தாண்டவத்தை உலகில் உள்ள பல நாடுகளுக்கு காண்பித்து வருகிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கில்லை. இந்தியாவிலும் பல மாநிலங்களில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் எவ்வாறு எல்லாம் வைரஸ் பரவக்கூடும் எனவும் பலரும் விளக்கமளித்து வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பயன்படுத்திய பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

அதாவது நோய் தொற்று உள்ளவர்கள் தொட்ட பொருளை மற்றவர் தொட்டாலே இந்த வைரஸ் மற்றவருக்கு தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. நம் நாட்டிலுள்ள ஜனத்தொகையில் எந்த பொருளை எவர் தொட்டு பயன்படுத்தினார்கள் என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் நாம் அன்றாட வேலைகளை செய்து வருகிறோம். 

அதிலும் குறிப்பாக செய்தித்தாள்களை படிக்கும் பழக்கம் உடையவர்கள் பலரும் செய்தித்தாள்களை வாங்கி படிப்பதற்கு மிகவும் அச்சமடைந்துள்ளனர். அதாவது பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கைகளை தாண்டி தான் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் செய்தித்தாள்கள் அனுதினமும் வருகின்றன. இதில் எந்த தொழிலாளிக்கு வைரஸ் தொற்று இருந்தது என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது.

இதில் வேலை செய்த ஒரே ஒரு நபருக்கு தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் எளிதாக பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட பொதுமக்கள் தற்போது செய்தித்தாள்களை வாங்கிப் படிக்க மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் நாள்தோறும் தங்கள் வீட்டு வாசலில் வந்து போடப்படும் செய்தித்தாள்களை அப்புறப்படுத்த கூட அவர்கள் அச்சப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

செய்தித்தாள்களை வாங்காமல் இருந்தால் நாட்டு நடப்பு எவ்வாறு மக்கள் அறிந்து கொள்ள முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். செய்தித்தாள்களை படித்தால் மட்டுமே நாட்டின் நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற சூழ்நிலையில் எவ்வாறு இதனை எதிர்கொள்ளப் போகிறார்கள் என பலரும் குழம்பி வருகின்றனர். அதாவது செய்தித்தாள்களை அதிகமாக வாங்கி படிக்கும் வாசகர்கள் தற்போது தங்கள் செல்போனில் உள்ள செயலிகளின் மூலம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ள நாளிலிருந்து தற்போது செய்தித்தாள்களைப் படிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாகவும் அதேசமயம் ஆன்லைனில் செய்திகளை வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சமீபத்திய முடிவுகள் கூறுகின்றன. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாம் எளிதாக பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் பலரும் நம்புவதாகவும் கூறப்படுகிறது.