சீனா உண்மையில் போருக்குத் தயாராகிறதா அல்லது சமாதானம் பேசுகிறதா? காரியத்தைக் கெடுத்துவிடுமா மோடியின் படை?

சீன அதிபரும் மோடியும் ஏழெட்டுமுறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.


ஏனென்றால், சமாதானம் பேசிக்கொண்டே இருக்கும் சீனா, லடாக் எல்லையில் தன்னுடைய படை குவிப்பையும் சாதுர்யமாக செய்துகொண்டிருக்கிறது. இதுதவிர, பாகிஸ்தான் பார்டரிலும் தன்னுடைய படையைக் குவித்து பெட்ரோல் எடுப்பதில் ஈடுபடுகிறது. உண்மை என்னவென்றால், இந்தியாவை இரண்டு புறமும் சீனா சூழ்ந்து நிற்கிறது.

ஆனால், இப்போதும் பா.ஜ.க.வினர் உண்மையை புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. மோடி அமைதியாக இருப்பதைப் பார்த்தால் கடும் கோபத்தில் போர் புரிய தயாராகிவருகிறார் என்ற ரீதியில் அவருக்கு பில்டப் கொடுத்துவருகிறார்கள்.

இதுகூட பரவாயில்லை, இந்தியா மீது சீனா போர் புரிய துடிப்பதால், சீன மக்கள் சீன அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். அதனால், சீனாவில் அமைதியின்மை நிலவுகிறதாம். அதனால் இதுதான் சாக்கு என்று, சீனாவுடன் போரிட்டு தோற்கடிக்க வேண்டும் என்கிறார்கள்.

இப்படி கோக்குமாக்குத்தனமாக பேசுபவர்களின் பேச்சு எந்த நிலையிலும் சீனாவை எட்டிவிடக் கூடாது என்பதுதான் இந்திய மக்களின் வேண்டுகோள். கொரோனா கொடுமைபடுத்திவரும் நேரத்தில், ஒரு போரை சந்திக்கும் மனநிலை யாருக்கும் இல்லை.

அதுவரை மோடியின் படை அமைதியாக இருக்கட்டும்.