அமித்ஷா சிட்டுக்குருவி லேகியம் கொடுக்க வருகிறாரா…? அழகிரி கிண்டல்.

தமிழகத்தில் அமித்ஷா வருகையை அடுத்து பா.ஜ.க.வின் பலம் கூடும் என்றும் எதிர்களுக்கு நடுக்கம் வரும் என்றும் பா.ஜ.க.வினர் வீராவேசமாகப் பேசி வருகின்றனர்.


இந்த நிலையில் கே.எஸ்.அழகிரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அமித்ஷா வருகையினால் தமிழகத்தில் பாஜக பலம் கூடும் என்கிறார்களே? என்று கேட்டதற்கு அழகிரி என்ன பதில் சொன்னார் தெரியுமா?

அமித்ஷா என்ன சிட்டுகுருவி லேகியமா கொடுக்க வர்றார்? பலம் கூடுவதற்கு கிண்டல் செய்தார். அப்படியென்றால், பா.ஜ.க. பலம் கூடாது என்கிறீர்களா? என்று கேட்டதும், ‘ஏங்க அவுங்க மிஸ்டுகால் கொடுத்தே 80 லட்சம் மெம்பர்ஸ் சேர்ந்ததா சொன்னாங்க... எவ்வளவு ஓட்டு வாங்குனாங்க... அவங்க சொல்றாங்கனு நீங்களும் கேட்குறீங்களே? என்னா போங்க! என்று கிண்டல் செய்துவிட்டு நகர்ந்தார்.

பா.ஜ.க.வினர் இதுக்கு என்ன பதில் சொல்லப்போகிறதோ..?