2.0 எல்லாம் ஒரு படமா? – பாகுபலி இயக்குனர் ராஜமவுலி அப்செட்!

2.0 திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது பற்றி பாகுபலி இயக்குனர் ராஜமவுலி கூறியுள்ள கருத்து ரஜினி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.


   இந்திய அளவில் பிரமாண்ட படங்களை எடுப்பதற்கு பெயர் பெற்றவர்கள் ஷங்கர் மற்றும் ராஜமவுலி. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படங்கள் இந்திய சினிமாவிற்கு உலக அளவில் பிரமாண்ட அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அதே சமயம் இந்திய திரையுலகிற்கு பிரமாண்டத்தை அறிமுகம் செய்து வைத்தவர் ஷங்கர். ஷங்கர் இயக்கத்தில் உருவான படங்கள் அனைத்திலுமே ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் அளவிற்கு ஏதேனும் ஒரு விஷயம் இருக்கும்.

  இதே போலத் தான் ரஜினியை வைத்து இந்திய அளவில்  அதிக பொருட் செலவில் 2.ஓ திரைப்படத்தை ஷங்கர் எடுத்துள்ளார். படம் கடந்த நவம்பர் 29ந் தேதி வெளியானத. தமிழ், மலையாளம், இந்தி மட்டும் இன்றி தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு 2.ஓ வெளியாகியுள்ளது. தெலுங்கிலும் ரூபாய் 100 கோடி வசூலை தாண்டி 2.ஓ ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்னர் வெற்றி பெற வாழ்த்துகள் என்று ராஜமவுலி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

  ஆனால் படம் வெளியான பிறகு 2.ஓ குறித்து ராஜமவுலி வாய்திறக்கவில்லை. படம் வெளியாகி ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் இந்திய அளவில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் தங்கள் கருத்தை ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் ஷங்கருக்கு போட்டியாளராக கருதப்படும் ராஜமவுலி படத்தை பார்த்துவிட்டேன் என்று கூட தகவல் தெரிவிக்கவில்லை. வழக்கமாக திரைப்படங்கள் பார்த்துவிட்டு அந்த படங்கள் நன்றாக இருந்தால் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பது ராஜமவுலி வழக்கம்.

  அந்த வகையில் இதற்கு முன்பு வெளியான பல தமிழ் படங்கள், இந்தி படங்களுக்கு நற்சான்றிதழும் ராஜமவுலி வழங்கியுள்ளார். ஆனால் இந்தியாவின் மிக பிரமாண்ட திரைப்படமான 2.ஓ குறித்து தற்போது வரை ராஜமவுலி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதற்கு படம் அவருக்கு பிடிக்கவில்லை என்பது தான் காரணமாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த அளவிற்கு 2.ஓ இல்லை என்பதால் ஏற்பட்ட அப்செட்டால் தான் ராஜமவுலி மவுனம் காப்பதாக சொல்லப்படுகிறது.

படம் பார்த்து நன்றாக இருப்பதாக கருதியிருந்தால் ராஜமவுலி நிச்சயமாக படத்தை பாராட்டியிருப்பார் என்கிறார்கள் சிலர். அதே போல் தற்போது வரை ராஜமவுலி 2.ஓ படத்தை பார்க்காமல் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அந்த படம் அவரை கவரவில்லை என்று சிலர் கூறி வருகின்றனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், ரஜினி ரசிகர்கள் ராஜமவுலி மீது கடுப்பாக ஆரம்பித்துள்ளனர்.